»   »  படம் வெளியாகும் முன்பே விருது மட்டுமல்ல... நல்ல வருமானமும் வந்துருச்சு! - தனுஷ் ஒப்புதல்

படம் வெளியாகும் முன்பே விருது மட்டுமல்ல... நல்ல வருமானமும் வந்துருச்சு! - தனுஷ் ஒப்புதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தான் தயாரிக்கும் விசாரணை மற்றும் காக்கா முட்டை படங்கள், வெளியாகும் முன்பே வருமானத்தைக் குவித்துவிட்டன என்று கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.

தேசிய விருது பெற்ற காக்கா முட்டை படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது.

ட்ரைலர் வெளியீடு

விழாவில் இயக்குனர் மணிகண்டன், இப்படத்தில் நடித்த சிறுவர்கள், ஐஸ்வர்யா ராஜேஷ், படத்தின் தயாரிப்பாளர்களான தனுஷ், வெற்றிமாறன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் ட்ரைலரை தனுஷ், வெற்றிமாறன் வெளியிட இயக்குனர் மணிகண்டன் மற்றும் படத்தில் நடித்த சிறுவர்கள் பெற்றுக் கொண்டனர்.

நான் - என் அண்ணன்

நான் - என் அண்ணன்

விழாவில் தனுஷ் பேசும் போது, ‘இந்தப் படத்தில் இரண்டு சிறுவர்கள் நடித்திருப்பார்கள். அவர்களைப் பார்க்கும்போது சிறுவன் நானாகவும், பெரியவன் என் அண்ணனாகவும் எனக்கு இருந்தது. இந்த கதை என் வாழ்க்கையில் நிகழ்ந்த நினைவுகளை ஞாபகப்படுத்தியது. அதனால் இப்படத்தை தயாரிக்க முன் வந்தேன்.

லாபம்

லாபம்

இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காக்கா முட்டை படமும், என்னுடைய தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிவரும் ‘விசாரணை' படமும் வெளியாவதற்கு முன்பே எனக்கு லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது' என்றார்.

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

வெற்றிமாறன் பேசும் போது, "இந்த ஸ்கிரிப்டை நான் முதலில் படித்தபோதே எனக்கு மிகவும் பிடித்தது. என் வாழ்க்கையில் நடந்த விஷயம் போல் இருந்தது. இந்த ஸ்கிரிப்டை தனுஷுக்கு அனுப்பினேன். தனுஷுக்கும் பிடித்ததால் சேர்ந்து பண்ணலாம் என்று முடிவு செய்தோம்," என்றார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, ‘காக்கா முட்டை படத்தில் நான் அம்மா வேடத்தில் நடித்திருக்கிறேன். இதில் நடித்தால் உங்களுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் நான் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை," என்றார்.

English summary
Actor Dhanush says that Kakka Muttai and Visaranai movie earned profits to him even before the release.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil