»   »  கருணாநிதியுடன் கமல் சந்திப்பு

கருணாநிதியுடன் கமல் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

முதல்வர் கருணாநிதியை நடிகர் கமல்ஹாசன் திடீரென சந்தித்துப் பேசினார்.

கலைஞானி கமல்ஹாசன் அரசியலில் இரு துருவங்களான கலைஞரையும், ஜெயலலிதாவையும் சம தூரத்தில் வைத்துப் பார்ப்பவர். இருவரிடமும் நல்ல நட்பு வைத்துள்ள கமல் இருவரையும் அவ்வப்போது சந்திப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

இந் நிலையில் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது சட்டசபை வாழ்வில் பொன்விழா கண்டதற்காக கருணாநிதியை வாழ்த்தினார் கமல்.

சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த கமல் கூறுகையில், சட்டசபை உறுப்பினராக 50 ஆண்டுகளைத் தொட்டுள்ளதற்காக முதல்வரை வாழ்த்தினேன் என்றார்.

இந்த சந்திப்பின்போது, தசாவதாரம் படம் குறித்து கருணாநிதி, கமலிடம் ஆர்வத்துடன் கேட்டறிந்தாராம். கமல் போட்டு வரும் 10 வேடங்கள் குறித்தும் அவர் கேட்டாராம்.

படம் வளர்ந்து வருவது குறித்து விளக்கிய கமல், ஜூலை மாத கடைசியில் படத்தின் பிரவியூ காட்சி நடைபெறலாம் என்றும் அப்போது தவறாமல் வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாராம்.

கமல் போடும் பத்து அவதாரங்களில் ஒன்று பாப் பாடகர் டாலர் மெஹந்தியைப் போன்ற வேடமும் ஒன்றாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil