»   »  பறக்க பெர்மிஷன் கேட்கும் கமல்

பறக்க பெர்மிஷன் கேட்கும் கமல்

Subscribe to Oneindia Tamil

தசாவதாரம் படத்திற்காக சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியம் மீது ஹெலிகாப்டரில் பறந்தபடி ஷூட்டிங் நடத்த முதல்வர் கருணாநிதியிடம் நடிகர் கமல்ஹாசன் அனுமதி கேட்டுள்ளாராம்.

கமல்ஹாசன் 10 வேடங்களில் கலக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க உருவாகும் பிரமாண்டப் படம் தசாவதாரம். ரஜினியின் சிவாஜியைப் போலவே இந்தப் படத்திற்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது.

படத்தின் பெரும் பகுதியை ஷூட் பண்ணி விட்ட நிலையில் சில முக்கியக் காட்சிகளை படமாக்குவதற்காக தசாவதாரம் யூனிட் தயாராகி வருகிறது.

அதில் ஒரு காட்சி, நேரு ஸ்டேடியம் மீது ஹெலிகாப்டரில் பறந்தபடி கமல் பங்கேற்கும் சண்டைக் காட்சி. இந்தக் காட்சியை படமாக்க அரசின் அனுமதியைப் பெற வேண்டும்.

சமீபத்தில் முதல்வர் கருணாநிதியை கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது தசாவதாரம் படம் குறித்து கருணாநிதியிடம் விளக்கினார் கமல். மேலும், அப்படத்தில் தான் போட்டுள்ள பத்து விதமான கெட்டப்புகள் குறித்தும் படத்துடன் விளக்கினாராம். அதை கருணாநிதி படு ஆவலாக கேட்டு கமல்ஹாசனின் முயற்சிகளைப் பாராட்டினாராம்.

அந்த சந்திப்பின்போது ஹெலிகாப்டர் சண்டைக் காட்சிக்கு பெர்மிஷன் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தாராம் கமல். பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்தாராம்.

எனவே விரைவில் அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் உள்ளது தசாவதாரம் யூனிட். கிடைத்தவுடன் படப்பிடிப்பு நடக்குமாம். இதற்கான ஏற்பாடுகளில் தற்போது தசாவதாரம் யூனிட் மும்முரமாக உள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil