»   »  கலக்க வரும் நெட்டை கமல்

கலக்க வரும் நெட்டை கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தசாவதாரத்தில் 8 அடி உயர மனிதராக கமல்ஹாசன் ஒரு வேடத்தில் தோன்றுகிறாராம்.

விதம் விதமான வேடங்களைப் புணைவதிலும், ரிஸ்க் எடுப்பதிலும், மாஜிக் காட்டுவதிலும் கலைஞானி கமல்ஹாசனுக்கு இணை அவரேதான்.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள மனிதராக தோன்றி அத்தனை பேரையும் அசத்தினார். இதுவரை யாரும் செய்திராத முயற்சி (புன்னகை மன்னன் படத்தில் குள்ள கமலாக ஒரு காட்சியில் மட்டும் தோன்றியிருப்பார் கமல்) என்று அப்போது குள்ள கமல் வேடம் பாராட்டப்பட்டது.

பின்னர் இந்தியனில் தாத்தா வேடத்தில் வந்து அசத்தினார். அவ்வை சண்முகியில் பொம்பளையாக மாறி பிரமிக்க வைத்தார்.

இப்படிப் படத்துக்குப் படம் விதம் விதமான கேரக்டர்களில் வந்து போன கமல், தனித் தனியாக இப்படி நடிப்பதை விட ஒரே படத்தில் பலவிதமான கேரக்டரில் வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தாரோ என்னவோ, தசாவதாரம் படத்தில் பத்து அவதாரங்கள் எடுத்து ரசிகர்களை பரவசப்படுத்த வருகிறார்.

தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் பூண்டுள்ள வேடங்கள் குறித்து அவ்வப்போது செய்திகள் வந்தபடிதான் உள்ளன. தொண்டுக் கிழவர் வேடம், ஜார்ஜ் புஷ் வேடம், பொம்பளை கமல் வேடம் என பல வேடங்கள் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்னொரு கெட்டப் குறித்த செய்தி ரிலீஸாகியுள்ளது. அது நெட்டை கமல் வேடம். குள்ள மனிதராக அபூர்வ சகோதரர்களில் வந்த கமல், தசாவதாரத்தில் ஒரு வேடத்தில் 8 அடி உயர நெட்டை மனிதராக வருகிறாராம்.

இதற்காக கிராபிக்ஸ் உதவியை நாடியுள்ளனராம். கம்ப்யூட்டர் மூலம் கமலை உயர மனிதராக்கிப் பார்த்ததில் அச்சு, அசலான நெட்டை மனிதராக மாறிப் போயிருந்தாராம் கமல். யாருமே இது கிராபிக்ஸ் வேலை என்று கூற முடியாத அளவுக்கு படு தத்ரூபமாக வந்துள்ளதாம் இந்த நெட்டை கமல் வேடம்.

ரசிகர்களுக்கு நெட்டை கமல் வேடம் பெரும் விருந்தாக அமையும் என்கிறது தசாவதாரம் யூனிட்.

அதேபோல சிவாஜி படத்தில் ரஜினியை வெள்ளைக்கார மனிதராக மாற்றிக் காட்டியது போல, தசாவதாரத்திலும் கமலை அமெரிக்கராக மாற்றும் யோசனையும் உள்ளதாம். ஏற்கனவே கமல் நல்ல வெளுப்பு என்பதால் இந்த முயற்சி தத்ரூபமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளதாம் தசாவதாரம் யூனிட்.

என்னென்னவோ சொல்றீங்க, என்னென்னவோ செய்றீங்க, அசத்துங்க, போங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil