»   »  மீண்டும் கிஸ் கிஸ் கமல்?

மீண்டும் கிஸ் கிஸ் கமல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொன்னான உதடுகளைப் புண்ணாக்குவதில் கெட்டிக்காரரான கமல்ஹாசன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தசாவதாரத்தில் ஸ்மார்ட்டான ஒரு கிஸ்ஸிங் காட்சியில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

முத்தக் காட்சிகளில் புரட்சி படைத்தவர் கமல்ஹாசன். 80களில் கமல்ஹாசன் நடித்த அத்தனை படங்களிலும் தப்பாமல் ஒரு முத்தக் காட்சி இடம் பெறும். அவரின் உதடுபடாத நாயகிகளின் உதடுகளே இல்லை எனும் அளவுக்கு அவரது முத்த வரலாறு யுத்தங்களையும் மிஞ்சும் தீரப் பின்னணி கொண்டது.

புன்னகை மன்னனில் அவர் ரேகாவுக்கு கொடுத்த முத்தம் இன்னும் சத்தம் போடாமல் ரசிகர்களின் மனக் கண்ணில் அவ்வப்போது ரீவைண்ட் ஆகிக் கொண்டுதானிருக்கிறது. மறக்க முடியுமா, மகாநதியில் சுகன்யாவுக்கு கமல் கொடுத்த காதல் முத்தத்தை? அழுகையை நிறுத்த முத்தமும் கை கொடுக்கும் என்பதை வெளிக்காட்டிய கலைஞானி கமல்.

இப்படி கமல்ஹாசனின் முத்த புராணம், நீண்டது, நெடியது, இனியது. ஆனால் சமீப காலமாக முத்த யுத்தத்தை நிறுத்தியிருந்தார் கமல். இந்த நிலையில் தசாவதாரம் படத்தில் மீண்டும் ஒரு கிஸ்ஸிங் காட்சியில் கமல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அவருடன் உதட்டு உடன்பாட்டுக்கு ஒத்துழைக்கப் போகிறவர் ரேகா என்கிறார்கள். இந்த ரேகா, புன்னகை மன்னன் ரேகா அல்ல, காதல் மன்னன் ஜெமினியின் செல்ல மகள் ரேகா. கமலும், ரேகாவும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. அதில்தான் இவர்களின் முதல் முத்தமும் இடம்பெறுகிறதாம்.

இருவரும் 50+ வயதினர். இருந்தாலும் இந்த முத்தக் காட்சியை படு அழகாக படமாக்கவுள்ளாராம் கே.எஸ்.ரவிக்குமார். கமலின் முத்தத்திற்காக ரேகா படு ஆவலோடு காத்திருக்கிறாராம்.

படத்தில் இளம் சிட்டுக்கள் மல்லிகா ஷெராவத், ஆசின் என ஒரு பக்கம் இருக்க, ஜெயப்பிரதா மறுபக்கம் நடிக்க, இடையில் ரேகாவுடன் கிஸ்ஸிங் என கமல் கலக்க, தசாவதாரம் படு சூடாக உருவாகி வருகிறது.

கருப்பு கமல்

சிவாஜியில் கருப்பு ரஜினியை வெள்ளைக்காரராக மாற்றியதைப் போல தசாவதாரத்தில் வெள்ளை கமலை நீக்ரோ கமலாக ஒரு காட்சியில் மாற்றியுள்ளனராம்.

ஆப்பிரிக்க நீக்ரோ கேரக்டரில் ஒரு கமல் வருகிறாராம். இதற்காக அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெள்ளை நிற கமலை கருப்பராக மாற்றியுள்ளனராம். இந்தக் காட்சி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுக்குமாம்.

அதேபோல ஆளவந்தானுக்குப் பிறகு இதில் மொட்டைத் தலையுடன் வருகிறாராம் கமல். சில காட்சிகளில் இந்த மொட்டைக் கமல் வருகிறாராம், சிவாஜியில் ரஜினி வந்தது போல.

தசாவதாரம் படத்தின் ஷூட்டிங் வேகமாக முடிந்து வருகிறது. கிளைமேக்ஸ் காட்சி நெருங்கிக் கொண்டிருக்கிறதாம். வெளிப்புறப் படப்பிடிப்பு ஜூலை 30ம் தேதிக்குள் முடிந்து விடுமாம். அதன் பின்னர் பிற வேலைகளுக்கு 2 மாதம் ஆகுமாம். எல்லாம் முடிந்து, தீபாவளிக்கு தசாவதாரம், ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கும் என்கிறது தயாரிப்புத் தரப்பு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil