»   »  மறுபடியும் மருதநாயகம்?

மறுபடியும் மருதநாயகம்?

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசனின் கனவுப் படமான மருதநாயகம் குறித்த செய்தி மறுபடியும் உயிர் பெற்றுள்ளது. ரிலையன்ஸின் துணை நிறுவனமான ஆட்லாப்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கக் கூடும் என்று பேச்சு அடிபடுகிறது.

இந்தியத் திரைப்பட உலகில் தனித்துவம் மிக்க நடிகர்களில், நம்ம ஊரைச் சேர்ந்த ரஜினியையும், கமல்ஹாசனையும் சேர்க்காமல் இருக்க முடியாது.

ரஜினியின் சிவாஜி, இந்திக்காரர்களை ஆட்டம் காண வைத்துள்ளது. இதுவரை சூப்பர் ஸ்டாராக பார்க்கப்பட்டு வந்த அமிதாப்பை ஓரம் கட்டியுள்ளார் ரஜினி.

அதேபோல தெற்கிலிருந்து இந்திக்குப் போய் அங்குள்ள நடிகர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டி சாதித்தவர் கமல் மட்டுமே. சாகர் படத்தில் நாயகன் ரிஷி கபூரை தூக்கி சாப்பிடும் வகையில் கமல் நடித்ததை இந்தித் திரையுலகினரால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு சரியான மரியாதை தராத காரணத்தால்தான் இந்தியை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார் கமல். இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த ஆட்லாப்ஸ் நிறுவனம் கமல்ஹாசனையும், ஹ்ரித்திக் ரோஷனையும் வைத்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்துக்காக கமலுக்கு ரூ. 20 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருக்குமானால், ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் 2வது நடிகர் என்ற பெருமை கமலுக்குக் கிடைக்கும். முதல் பெருமை ரஜினி, சிவாஜி படத்தில் இவர் வாங்கியதாக கூறப்படும் சம்பளம் ரூ. 25 கோடி!

இந்தப் படம் ஒரு வரலாற்றுக் கதையாம். ரூ. 100 கோடி மதிப்பில் இப்படத்தை உருவாக்கவுள்ளனராம். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்தப் படம் தரத்துடன் உருவாகப் போகிறதாம்.

இந்த நிலையில் தனது மருதநாயகம் படத்தை தூசு தட்டி எடுக்க முடிவு செய்துள்ளாராம் கமல். அதை ஆட்லாப்ஸ் நிறுவனத்தையே தயாரிக்குமாறும் கேட்டுள்ளாராம். ஆட்லேப்ஸ் நிறுவனமும் சம்மதம் தெரிவிக்கக் கூடும் என்று தெரிகிறது.

மருதநாயகம், கமல்ஹாசனின் கனவுப் படம். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இப்படத்தைத் தொடங்கினார் கமல். படத்தின் பூஜைக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் வந்திருந்தார். இந்தப் படத்துக்கான நிதியை அமெரிக்காவிலிருந்து திரட்ட தீர்மானித்திருந்தார் கமல்.

ஆனால் அந்த நேரம் பார்த்து பொக்ரானில் இந்தியா அணு குண்டை வெடித்துச் சோதித்துப் பார்த்தது, இந்தியா மீது அமெரிக்காவும் பொருளாதாரத் தடை விதித்தது, மருதநாயகம் கனவும் கலைந்தது.

தற்போது மருதநாயகம் உயிர் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் கூடி வருவதாக தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil