»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசியல்வாதிகளின் கரங்கள் கறை படிந்து கிடக்கின்றன. அந்தக் கரங்களை சுத்தப்படுத்த நிறைய காந்திகளை நாம்உருவாக்க வேண்டியதுள்ளது. எனவே நானும் அரசியலுக்கு வருவேன் என்று கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் கமல் ஹாசனின் 47-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை, நவ. 7) கொண்டாடப்படுகிறது.இதையொட்டி நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் புதன்கிழமை காலை ரசிகர்கள் அவரை சந்தித்து பிறந்தநாள்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

மேடையில் வைக்கப்பட்டிருந்த தனது தாய், தந்தையரின் படத்திற்கு மாலைகள் அணிவித்த கமல்ஹாசன் பின்னர்ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். அவர்கள் மத்தியில் அவர் பேசுகையில்,

நாம் எல்லோரும் உலக உருண்டையின் மீது உள்ள பூச்சிகள். ஆனால் ஆப்கானிஸ்தானில் குண்டு மழைபொழிகிறது. கட்டடங்கள் இடிந்து விழுகின்றன. இவற்றால் ஆப்கானிஸ்தானியர்களுக்கு மட்டுமல்ல, உலகஉருண்டையில் உள்ள நம்மைப் போன்ற பூச்சிகளுக்கும் கூட ஆபத்துதான்.

எனத பிறந்தநாளை நியாயப்படுத்தி எனது அரசியல் ஆர்வத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். எனதுநற்பணி மன்ற ஆர்வங்களுக்கு எல்லாம் ரசிகர்களாகிய நீங்கள் மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறீர்கள்என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

பிறந்தநாள் கொண்டாடுவது முக்கியமல்ல, நாம் எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். நான் போட்டவிதையில் இருந்து கிடைக்கும் பழத்தை நானே சாப்பிட முடியாது. பின்னர் வரும் சந்ததிகளுக்குத்தான் அது போய்ச்சேரும்.

இந்த வசனத்தை நானே எழுதி தேவர் மகன் படத்தில் வைத்து, அதை நடிகர் திலகத்தின் வாயால் கேட்கும்பாக்கியத்தை நான் பெற்றதை பெருமையாக கருதுகிறேன்.

நமது நாட்டை காந்தி பிறந்த நாடு என்று சொல்வதில் பிரயோஜனம் இல்லை. இன்னும் காந்திகள் நமக்கு நிறையதேவையாக இருக்கிறது. கதராடை அணிந்தால்தான் காந்தியவாதி என்று கூற முடியாது. ஜீன்ஸ் பேன்ட் போட்டுக்கூட காந்தியவாதியாக இருக்கலாம்.

நமது அரசியல்வாதிகள் அனைவரின் கரங்களும் கறை படிந்திருக்கிறது. ஆனால் நம்முடைய கையில்அவ்வப்போது இடப்படும் கறை (தேர்தலின்போது இடப்படும் அடையாள மை) புனிதமானது.

நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன். அதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் துப்பாக்கியோடு வர மாட்டேன்.மலரோடு, நல்ல மனதோடு வருவேன்.

இப்போதுள்ள அரசியல் சத்தியமாக திருப்தியளிக்கவில்லை. ஓட்டுப் போடுபவர்களின் எண்ணிக்கை 47சதவீத்திற்கும் கீழே போய்க் கொண்டுள்ளது. இதற்கு என்ன அர்த்தம்? மக்கள் அரசியல்வாதிகளை வெறுக்கிறார்கள்என்றுதானே அர்த்தம்.

இதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். நாடு விரும்புவது, கொண்டாடுவது நல்ல மனிதர்களைமட்டுமே. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்டவர்கள் அரசியலுக்கு வருவதில்லை என்றார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனுக்கு திரையுலகைச் சேர்ந்த பலர் நேரில் வந்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறினர்.

ரசிகர்களின் வாழ்த்துக்குப் பிறகு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இலக்கியவிருதுகள் வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. பத்திரிக்கையாளர் மதன் மற்றும் பேராசிரியர் தாண்டவன் முன்னிலையில் நிகழ்ச்சிகள் நடந்தன.

கமலின் தாயார் ராஜலட்சுமி பெயரில் அமைந்த விருது எழுத்தாளர் படுதலம் சுகுமாரனுக்கும், தந்தை தியாகிசீனிவாசன் பெயரில் அமைந்த விருது சமூகசேவகி பவானி ஸ்ரீதருக்கும் வழங்கப்பட்டன. இருவருக்கும் தலாரூ.10,000 பரிசும் அளிக்கப்பட்டது. கமல்ஹாசன் விருதுகளை வழங்கினார்.

குமரி அனந்தன் சிறப்புரையாற்றினார். பல்வேறு பேச்சாளர்கள் கலந்து கொண்ட பேச்சுப் போட்டியும் நடந்தது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil