twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோ .. ஹீரோ ..

    By Staff
    |

    நடிகர் கமலஹாசன் தன்னுடைய உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக இன்று தானம்செய்தார்.

    சுதந்திர தினமான இன்று காலை சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் "அனாடமி"பிரிவுக்குத் தன் உடலைத் தானம் செய்தார் கமல்.

    இதற்கான விழா இன்று (ஆகஸ்டு 15) சென்னை-ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் அலுவலகத்தில்நடைபெற்றது. சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் இதற்கான உறுதிப்பத்திரங்களை கமல் வழங்கினார். இந் நிகழ்ச்சியில் அவரது மகள் ஸ்ருதியும் கலந்து கொண்டார்.

    தன்னுடைய உடலைத் தானமாக வழங்குவதாக அந்தச் சான்றிதழில் கமல் உறுதிமொழி அளித்துகையெழுத்திட்டுள்ளார். கமலுடைய மூத்த மகள் ஸ்ருதி அதில் சாட்சிக் கையெழுத்துப் போட்டுள்ளார்.

    அதன் பின்னர் ஏழைகளுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் தையல் கருவிகளையும் மற்றும் பல்வேறு நலத் திட்டஉதவிகளையும் கமல் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஆக்டர் கமல், என் உடலை தானாமாகத் தருவதால் என்னுடைய மரணத்திற்குப் பிறகுஎன் பெயர் சித்திரகுப்தனின் புத்தகத்தில் இடம் பெறுமா என்று தெரியவில்லை. உடல் மண்ணுக்கு, உயிர் உனக்குஎன்பார்கள். கடைசியில் மண்ணோ அல்லது தீயோ திண்ணப் போகும் உடலை மனிதனுக்கே கொடுப்பதில்தவறில்லை.

    மரணத்திற்குப் பிறகாவது மற்றவர்களுக்கு உபயோகமாக இருப்போமே என்பதால் தான் என்னுடைய உடலைமருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காகத் தருகிறேன்.

    நான் உடல் தானம் செய்யப் போவதை அறிந்ததும் எனது ரசிகர்கள் பலர் வருத்தப்பட்டனர். உங்களுக்கு இறப்பேகிடையாது. 100 வருடங்கள் வாழ வேண்டும் என்றனர்.

    நிான் 150 வருடங்கள் கூட வரை வாழத் தயார், ஆனால் அதற்குப் பிறகு மரணம் வருமே? அப்போது எனதுஉடலை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்ற ஆசையில் தான் உடலைத் தானம்செய்துள்ளேன்.

    சாக்ரடீஸ் போன்ற பெரிய மேதைகளின் புத்தகங்கள் படிக்கப்பட்ட தமிழகத்தில் என் உடலும் படிக்கப்படுவதுஎனக்குப் பெருமை.

    இதை விளம்பரப்படுத்த வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் இது எனக்கான விளம்பரம் அல்ல.இதுபோன்ற செயல்களை அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறும் விளம்பரம். அதற்காகத் தான் இதைஇப்படி விழாவாக நடத்தினேன். ஒவ்வொருவரும் தங்களது உடலைத் தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார்கமல்.

    அங்கு ஏராளமான கமல் ரசிகர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் கூடி நின்றனர். உடல் தானத்திற்கான சான்றிதழை கமல்கையெழுத்திட்டு வழங்கிய போது அனைவரும் சந்தோஷத்துடன் கை தட்டி வரவேற்றனர்.

    கடந்த 11ம் தேதி தான் சென்னை-அயோத்திக் குப்பத்தில் தன்னுடைய தாய் ராஜலட்சுமி பெயரில் ஒரு புதியநூலகத்தை கமல் திறந்து வைத்தார் என்பது நினைவுகூறத்தக்கது. சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ளபுத்தகங்களையும் இந்த நூலகத்திற்கு அவர் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X