»   »  நான் ஓட்டுப் போட மாட்டேன், என் ஓட்டை கள்ள ஓட்டுப் போடலாம்... கமல் பேட்டியால் பரபரப்பு

நான் ஓட்டுப் போட மாட்டேன், என் ஓட்டை கள்ள ஓட்டுப் போடலாம்... கமல் பேட்டியால் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலின் போது படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருப்பேன் என்பதால், நான் ஓட்டுப் போடுவது சந்தேகமே என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம் ஒன்றில் நடிகர் கமல் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்படத்திற்கு ‘சபாஷ் நாயுடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

ஷூட்டிங்...

ஷூட்டிங்...

இந்நிலையில், இப்படம் தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கமல். அப்போது அவர், "தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மே 16 ஆம் தேதி நான் இந்தியாவில் இருக்கப்போவது இல்லை. படப்பிடிப்புகாக லாஸ் ஏஞ்சலஸ் செல்ல இருக்கிறேன்" என்றார்.

சந்தேகம்...

சந்தேகம்...

இதனால், இந்தத் தேர்தலில் தான் வாக்களிப்பது சந்தேகமே எனத் தெரிவித்துள்ள கமல், தனது வாக்கை வேறொருவர் அளிக்கும் நிலையும் ஏற்படலாம் என்றும், இது போன்ற அனுபவம் தனக்கு உள்ளது எனவும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையம்...

தேர்தல் ஆணையம்...

சட்டசபைத் தேர்தலில் 100 சதவீத வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. இதில், நடிகர்களும் பங்கேற்று வருகின்றனர்.

கள்ள ஓட்டு...

கள்ள ஓட்டு...

இந்த சூழ்நிலையில் தேர்தலில் தனது வாக்கு கள்ள ஓட்டுகளாகப் போடும் வாய்ப்பிருப்பதாக கமல் பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Actor Kamal has said that he is not sure about voting in this assembly election.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil