twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் பிறந்த நாள்-ரசிகர்கள் ரத்ததானம்

    By Staff
    |
    Click here for more images
    கலைஞானி கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி சென்னையில், 500 ரசிகர்கள் பங்கேற்ற ரத்ததான முகாமை நடிகை கெளதமி தொடங்கி வைத்தார்.

    கலைஞானி கமல்ஹாசனின் பிறந்த நாள் வருகிற 7ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக கமல்ஹாசன் பிறந்த நாளின்போது பல்வேறு நலத் திட்ட உதவிகளையும், ரத்ததானம், கண் தானம் உள்ளிட்ட நற்செயல்களிலும் அவரது ரசிகர்கள் ஈடுபடுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் அதுபோலவே பல்வேறு திட்டங்களை அவர்கள் வைத்துள்ளனர். இந்த முறை ரத்ததானத்தை மிகப் பெரிய அளவில் நடத்தத் தீர்மானித்துள்ளனர்.

    அதன்படி சென்னையில் ரத்ததான முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் இந்த ரத்ததான முகாம் நடைபெறுகிறது.

    சென்னையில் நடந்த ரத்ததான முகாமை நடிகை கெளதமி தொடங்கி வைத்தார். இதில் 500 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    4ம் தேதி சென்னை புளியந்தோப்பு டிமெலிஸ் சாலையில் உள்ள இந்து பள்ளியில் நடந்த ரத்ததான முகாமில், கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் தனபால் கலந்து கொண்டார். மேலும், பூங்கா நகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், டாக்டர்கள் காந்தராஜ், ரகுபதி, பதி, அசோக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    கமல்ஹாசன் நற்பணி இயக்க செயலாளர் குணசீலன், பத்திரிக்கைத் தொடர்பாளர் நிகில் முருகன், பூங்காநகர் கருணாகரன், கேசவன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர்கள் தரணி, ரமேஷ் பாபு, கிருஷ்ணன், ராஜா, வட சென்னை மாவட்ட செயலாளர்கள் சங்கர், மாறன், தென் சென்னை மாவட்ட செயலாளர்கள் ஜான், ஏழுமலை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    மாவட்டத்திற்கு 500 பேர் ரத்ததானம் செய்கின்றனர். மொத்தம் 15 ஆயிரம் பேர் ரத்ததான முகாம்களில் கலந்து கொள்கின்றனர்.

    கமல்ஹாசன் பிறந்த தினத்தையொட்டி நவம்பர் மாதத்தை உயிர் காக்கும் மாதம் என கமல்ஹாசன் ரசிகர் நற்பணி மன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Read more about: kamal
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X