குழந்தையாகவே மாறிய கமல்ஹாசன்.. யப்பா எவ்வளவு க்யூட்.. மனுஷன் அழகோ அழகு.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான தக் லைஃப் திரைப்படம் மோசமான ட்ரோலை சந்தித்தது. அடுத்ததாக அவர் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஸ்டண்ட மாஸ்டர்ஸாக இருந்த அன்பறிவ் முதன்முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்திருப்பதால் அவர்கள் எந்த மாதிரியான சம்பவத்தை செய்யப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் கமல் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

சினிமாவிலிருந்து பிரேக் எடுத்து அரசியலுக்கு சென்ற கமல்; லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படம் தரமான கம்பேக்காக அவருக்கு அமைந்தததால் மீண்டும் சினிமாவில் முழு கவனத்தை செலுத்திவருகிறார். அந்தவகையில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்தார்.

இரண்டு படங்களுமே தோல்வி: இரண்டு படங்களையும் அவரும், அவரது ரசிகர்களும் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் இரண்டு படங்களும் படுதோல்வியைத்தான் சந்தித்தன. தோல்வி என்பதை தாண்டி கடுமையான ட்ரோல்களையும் அந்தப் படங்கள் சந்தித்தன. கமலின் கரியரிலேயே அதிக அளவுக்கு ட்ரோல்களை சந்தித்த படங்கள் என்றால் அந்த இரண்டு படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan s Cute Video with a Kid Goes Viral
Photo Credit:

அடுத்த படம்: ஷங்கர், மணிரத்னம் இயக்கத்துக்கு பிறகு அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் கமல். அன்பும், அறிவும் கோலிவுட்டின் ஃபேமஸ் சண்டை பயிற்சியாளர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் முதன்முறையாக படம் இயக்க வந்திருப்பதாலும்; அவர்கள் சொன்ன கதை மீது கமல் நம்பிக்கை வைத்து கமிட்டாகியிருப்பதாலும்; எந்த மாதிரியான படத்தை கொடுக்கப்போகிறார்கள் என்ற ஆவல் அனைவரிடமும் எழுந்திருக்கிறது.

ரஜினியுடன் நடிக்கும் கமல்?: இதற்கிடையே ரஜினிகாந்த்தும், கமலும் இணைந்து நடித்து 40 வருடங்கள் ஆகப்போகின்றன. இப்போது அவர்கள் மீண்டும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள். அதனை இருவரும் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார்கள். அதேசமயம் நீண்ட வருடங்கள் கழித்து அவர்கள் இணைவதால் யார் இயக்குநர் என்ற மில்லியன் டாலர் கேள்வியும் எழுந்திருக்கிறது. கூலி கொடுத்த ரிசல்ட்டால் லோகேஷ் மட்டும் வேண்டாம் என்பது பலரது நிலைப்பாடு.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் கமலின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது சிறுவன் ஒருவனின் அருகில் அமர்ந்து அவன் திருக்குறள் சொல்வதை கமல் ரசித்துக்கொண்டிருக்கிறார். மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனத்தை அச்சிறுவன் பேசும்போது, 'டேய் டேய் வேடிக்கையை விட்டுட்ட பாரு' என்று க்யூட்டாக கமல் சொல்லிக்கொடுக்கிறார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அட குழந்தையாகவே ஆண்டவர் மாறிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்து அதனை ஷேர் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X