»   »  மகள் ஸ்ருதியை ஆஹா ஓஹோவென புகழ்ந்து தள்ளும் கமல் ஹாஸன்!

மகள் ஸ்ருதியை ஆஹா ஓஹோவென புகழ்ந்து தள்ளும் கமல் ஹாஸன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவரை நடிகர்களை இயக்கினேன். ஆனால் இப்போதுதான் முதல்முறையாக ஸ்ருதி ஹாசன் என்ற நட்சத்திரத்தை வேலை வாங்கியிருக்கிறேன். இது புதிய அனுபவம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

நீண்ட இடைவேளைக்குப் பின் 'சபாஷ் நாயுடு' என்ற முழுநீள காமெடிப் படத்தை இயக்கி, நாயகனாகவும் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.

இதில் கமலுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ஸ்ருதியை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது? என கமல் கூறியதை இங்கே காணலாம்.

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

''முதன்முறையாக மகள் ஸ்ருதியுடன் இப்படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறேன். இதற்கு முன் நான் நடிகர்களை மட்டுமே இயக்கியிருக்கிறேன், ஒரு நட்சத்திரத்தை இயக்கியதில்லை. ஸ்ருதி ஒரு நடிகை மட்டுமின்றி நட்சத்திரமாகவும் ஜொலித்து வருகிறார். அதனால் இதை ஒருவித புதிய அனுபவம் என்றே கூறலாம்.

தசாவதாரம்

தசாவதாரம்

'தசாவதாரம்' படத்தில் இடம்பெற்ற என்னுடைய அமெரிக்க உச்சரிப்புக்கு ஸ்ருதியே முழுக் காரணம். அவர் அப்போது அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததால் அவர்களின் மொழி உச்சரிப்பு எப்படி இருக்கும் என்று எனக்கு எடுத்துக் கூறி பேச வைத்தார். மெட்ராஸ் தமிழ் பேசிக்கொண்டிருந்த என்னை அமெரிக்கர்களைப் போல பேச வைத்ததில் ஸ்ருதிக்கு முக்கியப் பங்குண்டு.

காமெடி

காமெடி

நான் காமெடியை விட்டு ஒருபோதும் விலகியதில்லை. 'விஸ்வரூபம்' படத்தில் கூட காமெடிக் காட்சிகளை வைத்திருந்தேன். எனது நடிகர்களோ, படக்குழுவினரோ வேலைப்பளுவுக்கு இடையில் சத்தம் போட்டு சிரிக்கும்போது நானும் அதனை ரசித்து மகிழ்கிறேன். 'சபாஷ் நாயுடு'வில் அதுபோன்ற தருணங்கள் நிறைய உள்ளன'' என படப்பிடிப்பு அனுபவம் குறித்து கமல் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

டிசம்பர்

டிசம்பர்

மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து வருகின்ற டிசம்பர் 1ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமலின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'விஸ்வரூபம் 2'வும் இந்த வருடமே வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரே வருடத்தில் கமலின் 2 படங்கள் வெளியாவதும், அதில் ஒன்று காமெடிப் படம் என்பதும் கமல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

English summary
Kamal haasan Shared Sabash Naidu Shooting Experience in Recent Interview.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil