»   »  சசிகலா பற்றி வள்ளுவன் குறள் பாடி ட்வீட்டிய கமல்

சசிகலா பற்றி வள்ளுவன் குறள் பாடி ட்வீட்டிய கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் உலக நாயகன் கமல் ஹாஸன் தனக்கே உரிய பாணியில் ட்வீட் செய்துள்ளார்.

தமிழகத்தின் புதிய முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் முதல்வராவதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

சசிகலா முதல்வர் ஆவதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கமல்

கமல்

கமல் அவ்வப்போது ட்விட்டரில் கவிதை வெளியிடுவார் அல்லது கருத்து தெரிவிப்பார். அதன் அர்த்தம் புரியாமல் பலர் குழம்புவார்கள். அப்படி கமல் பல மாதங்களுக்கு முன்பு ட்வீட் செய்ததன் அர்த்தம் தற்போது புரிந்துள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

சாமி

யாறு சாமி நீ..! @ikamalhaasan #savetamilnadu #sasikala

ட்வீட்

ட்வீட்

சசிகலா முதல்வராவது குறித்து ஏதாவது ட்வீட் போடுங்களேன் கமல் சார் என்று நெட்டிசன்கள் காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்பு வீண் போகவில்லை. கமல் ட்வீட்டிவிட்டார்.

குறள்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்.
குறள்
(பிழை நீக்கியது)

விளக்கம்

@ikamalhaasan இலகுவான மயில் இறக்கையாக இருந்தாலும்

அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால்

அவ்வண்டியின் அச்சு முறியும் -இக் குறள்

சசிகலா

சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சிப் பொறுப்பேற்றுள்ள சசிகலாவால் முதல்வர் பதவி என்ற பாரத்தை தாங்க முடியாது என்பதை தான் கமல் குறள் மூலம் சொல்கிறாரோ?

English summary
Kamal Haasan has tweeted about the current political situation in Tamil Nadu. This time he has explained his stand with the help of a Kural.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil