கேமராவை இறக்குங்க.. நிகழ்ச்சியில் கமல் செய்த சூப்பர் செயல்.. அட ஆண்டவரு வேற லெவல் ப்பா!

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த தக் லைஃப் படம் படுதோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மட்டுமின்றி கமலுக்கேகூட அப்செட்டைத்தான் கொடுத்திருக்கும். ஏனெனில் இதற்கு முன்பு அவரும், மணிரத்னமும் இணைந்து நாயகன் என்ற படத்தை கொடுத்துவிட்டு அந்தப் பெயரை காப்பாற்ற முடியாதது நிச்சயம் ஏமாற்றம்தான். அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தை எதிர்பார்த்திருக்கிறார் அவர்.

அரசியலுக்கு சென்றுவிட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்த கமலுக்கு ஆரம்பம் அமர்க்களமாகத்தான் இருந்தது. விக்ரம் திரைப்படம் 300 கோடி ரூபாய்வரை வசூலித்து கெத்து காட்டியது. அந்த உற்சாகத்தோடுதான் இந்தியன் 2வில் நடித்தார். ஆனால் அவரது கரியரில் அது மாதிரி ஒரு தோல்வியை சந்தித்திருக்கமாட்டார். அந்தப் படம் சந்தித்த அடி அதன் மூன்றாம் பாகத்தையே ரசிகர்கள் மத்தியில் மறக்கடிக்கவிட்டது.

தக் லைஃப் மோசம்: தமிழ் சினிமாவின் இரு பெரும் தூண்கள் என்று கொண்டாடப்படும் ஷங்கர், மணிரத்னத்தில் முதலாமவர் சறுக்கலை கொடுத்துவிட்டார். அடுத்ததாக மணிரத்னத்துடன் இணைந்தார் கமல். தக் லைஃப் படமும் மோசமான விமர்சனத்தை சந்தித்தது. முத்த மழை பாடல் மட்டுமே பலரால் கொண்டாடப்பட்டது. ஆனால் அதையும் விஷுவலில் மணி சார் சொதப்பி வைத்ததை மன்னிக்க முடியாத குற்றமாகவே ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

Kamal Haasan s Latest Video Goes trending on social media
Photo Credit:

இறங்கி வந்த கமல்: லோகேஷுக்கு பிறகு ஷங்கர், மணிரத்னம் என சீனியர்களோடு பயணப்பட்ட கமலுக்கு சூடு பட்டதால் மீண்டும் அவர் தனது வண்டியில் இளையவர்களை ஏற்ற நினைத்தார். அதன்படி ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் சொன்ன கதை பிடித்துப்போக அவர்கள் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். சீனியர்கள் கொடுக்காத வெற்றியை இந்த ஜூனியர்கள் கொடுப்பார்கள் என்பது கமலின் நம்பிக்கை.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்தப் படத்துக்கு பிறகு இந்தியன் 3 வருமா என்ற சந்தேகமும் நீடிக்கிறது. சூழல் இப்படி இருக்க கமல்ஹாசன் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரை முன் வரிசையில் இருந்தவர்கள் கேமராவால் படம் பிடித்தார்கள். அதன் காரணமாக பின் வரிசையில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் தொந்தரவு ஏற்பட்டது. அதனை கவனித்த கமல், கேமராவை இறக்குங்க. பின் வரிசையில் இருப்பவர்களுக்கும் தெரியணுமே என்று சொல்ல அனைவரும் அதன்படியே செய்தார்கள். இந்த வீடியோதான் அதிகம் ஷேர் செய்யப்பட்டுவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X