பிஸியாகும் கமல்...அடுத்தடுத்து என்ன பிளான் வச்சிருக்கார் தெரியுமா ?
சென்னை : சினிமா ஷுட்டிங், அரசியல், பிக்பாஸ் என பிஸியாக இருந்த கமல், சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பி வந்ததும் கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் பங்கேற்க இருந்த அத்தனை வேலைகளும் பாதியில் நின்றது.
கொரோனாவில் இருந்து மீண்ட கமல், மீண்டும் பிக்பாஸ் ஷுட்டிங்கில் பிஸியானார். ஃபினாலே ஷுட்டிங் முடிந்த கையோடு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவமனை பரிசோதனை முடிந்து வீடு திரும்பி விட்டதால், அடுத்தடுத்து பல பிளான்களை வைத்துள்ளாராம் கமல்.

ஓய்வில் இருக்கும் கமல்
மருத்துவ பரிசோதனை முடிந்த கமலை சிறிது நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கும் படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளார்களாம். ஒரு வாரமாவது ஓய்வெடுக்க வேண்டும் என சொல்லி விட்டதால் தற்போது கமல் ஓய்வில் இருந்து வருகிறாராம். ஓய்விற்கு பிறகு ஜனவரி 25ம் தேதி முதல் விக்ரம் ஷுட்டிங்கை மீண்டும் தொடர போகிறாராம்.

அடுத்து பிக்பாஸ் அல்டிமேட்
அதோடு வார இறுதி நாட்களில் ஓடிடி வெர்சனான பிக்பாஸ் அல்டிமேட் ரியாலிட்டி ஷோ ஷுட்டிங்கிலும் கமல் கலந்து கொள்ள போகிறாராம். 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ள இந்த நிகழ்ச்சியில் பிக்பாசின் ஐந்து சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பங்கேற்க போகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கான செட் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

புது பட அறிவிப்பு எப்போ
விக்ரம் படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால், அடுத்த படங்களின் வேலைகளையும் துவக்க போகிறாராம் கமல். டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தான் தயாரிக்க போகிறது.

தயாராகிறதா தேவர்மகன் 2
அதோடு விக்ரம், விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கும் திரைக்கதை தயார் செய்து வருகிறார். இது தேவர்மகன் 2 படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த படம் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியிடப்பட உள்ளதாம். அடுத்தடுத்த மாதங்களில் கமல் தனது அடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புக்களை வெளியிட போகிறாராம்.


Click it and Unblock the Notifications











