»   »  எப்படி இருக்கிறார் கமல் ஹாஸன்?

எப்படி இருக்கிறார் கமல் ஹாஸன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாடிப் படிகளில் தவறி விழுந்து கால் முறிந்த கமல் ஹாஸன், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நலமாக உள்ளதாக அவரது அண்ணன் சந்திரஹாஸன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் வியாழக்கிழமை தனது அலுவலகப்படிக்கட்டிலிருந்து இறங்கும்போது தவறி கீழே விழுந்ததால், அவரது வலது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதனால், அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவைச் சிகிச்சை

அறுவைச் சிகிச்சை

முடநீக்கியல் மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் அவரது வலது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

வீடு திரும்புவது எப்போது?

வீடு திரும்புவது எப்போது?

அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் கமல்ஹாசனை பூரண ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் இரண்டு முதல் மூன்று நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது. அவரை நடிகை கௌதமி உடனிருந்து கவனித்து வருகிறார். அநேகமாக நாளை அவர் வீடு திரும்புவார் எனத் தெரிகிறது.

லண்டன் நிகழ்ச்சி ரத்து

லண்டன் நிகழ்ச்சி ரத்து

"சபாஷ் நாயுடு' படப்பிடிப்புக்காக ஒரு மாத காலத்துக்கும் மேலாக அமெரிக்காவில் இருந்த கமல்ஹாசன், சென்னைக்கு அண்மையில் திரும்பினார். லண்டன் திரைப்பட விழாவில் இந்த வார இறுதியில் கமல்ஹாசன் பங்கேற்று, வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறுவதாக இருந்தார். எலும்பு முறிவு காரணமாக, அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

எப்படி இருக்கிறார்?

எப்படி இருக்கிறார்?

சந்திரஹாசன் நடிகர் கமல்ஹாசன் நலமாக உள்ளதாக அவரது அண்ணன் சந்திரஹாசன் தெரிவித்தார்.

பின் செய்தியாளர்களிடம் சந்திரஹாசன் கூறுகையில், "கமலுக்கு காலில் ஏற்பட்ட எலும்பு முறிவைச் சரி செய்ய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதம் முதல் ஒன்றரை மாதம் கழித்து கமல் இயல்பாக நடக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். காலுக்கு அதிக பாரம் தரக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், கைப் பிடியை கமல் பயன்படுத்த வாய்ப்புள்ளது. கமல் உற்சாகமாக உள்ளார். ரசிகர்கள் பயப்படத் தேவையில்லை," என்றார்.

English summary
Here is the health update of actor Kamal Hassan suffered a fracture on his right leg after slipping and falling down at his office in Chennai on Wednesday night.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil