»   »  ட்வீட்டுக்கு ரெஸ்ட்... பிரிட்டிஷ் அரண்மனையில் கமல் ஹாஸன்!

ட்வீட்டுக்கு ரெஸ்ட்... பிரிட்டிஷ் அரண்மனையில் கமல் ஹாஸன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழக அரசியலில் தனது கருத்துக்களால் பரபரப்பு கிளப்பி வரும் கமல் ஹாஸன், தற்காலிகமாக ட்விட்டருக்கு ஒரு இடைவெளி கொடுத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி இங்கிலாந்து சென்ற அவர், பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்தைச் சந்தித்தார்.

Kamal Hassan meets The Queen

இங்கிலாந்து அரண்மனையில் பிரிட்டன் - இந்தியா கலாச்சார வரவேற்பு நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சிக்கான சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக நடிகர் கமல் ஹாஸன் பங்கேற்றார்.

பிரிட்டிஷ் மகாராணியுடன், எடின்பர்க் கோமகன், கேம்பிரிட்ஜின் கோமகன் மற்றும் சீமாட்டி, எஸ்ஸக்ஸ் அரச பிரதிநிதி, யார்க் இளவரசி, க்ளாசெஸ்டர் கோமகன் மற்றும் சீமாட்டி, கென்ட் இளவரசர் ஆகியோர் கலந்து கொண்ட இந்த வரவேற்பில் கமல் ஹாஸனும் கலந்து கொண்டார்.

மகாராணி இரண்டாம் எலிசபெத்தைச் சந்தித்து கைகுலுக்கினார் கமல் ஹாஸன்.

Kamal Hassan meets The Queen

1995-ம் ஆண்டு மகாராணி எலிசபெத் சென்னை வந்தபோது, கமல் ஹாஸனின் நின்றுபோன படமான மருதநாயகத்தின் படத்தைத் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Kamal Hassan was participated in the reception of UK - India cultural on Feb 27th and met The Queen Elizabeth 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil