»   »  விரைவில் வீடு திரும்புவேன்... நலம் விசாரித்த ரசிகர்களுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்

விரைவில் வீடு திரும்புவேன்... நலம் விசாரித்த ரசிகர்களுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் குணமடைந்து ரசிகர்களை சந்திப்பேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் தாம் குணமடைய விரும்பி செய்தி அனுப்பிய ரசிகர்களுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். கால் முறிவுக்கு சிகிச்சை பெறும் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பியுள்ளார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் தற்போது அவர் சபாஷ் நாயுடு என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதில் அவரது மகள் சுருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கடந்த மே மாதம் இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கி தொடர்ந்து நடந்தது. அங்கு முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு கடந்த வாரம் கமல்ஹாசன் சென்னை திரும்பினார்.

அடுத்து விசாகப்பட்டினத்தில் வருகிற 25ம்தேதி படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டார். சென்னை ஆழ்வார் பேட்டையில் கமல்ஹாசனின் அலுவலகம் உள்ளது. அங்கு புதன்கிழமை இரவு சபாஷ் நாயுடு படப்பிடிப்பு வேலைகள் மற்றும் திரைக்கதை விவாத பணிகளில் அவர் ஈடுபட்டு இருந்தார்.

நள்ளிரவு 1 மணிக்கு அந்த வேலைகளை முடித்து விட்டு மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே இறங்கினார். அப்போது திடீரென்று அவர் படிக்கட்டில் தவறி விழுந்தார். இதில் கமல்ஹாசனுக்கு பலத்த அடிபட்டது. காலில் சதை கிழிந்து ரத்தம் கொட்டியது. வலது காலின் மூட்டுக்கு கீழே எலும்பு முறிவும் ஏற்பட்டது.

உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் கமல்ஹாசனை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாலும், முதுகுதண்டில் காயம் ஏற்பட்டதாலும், சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கிச்சைக்குப் பின் கமல்ஹாசன் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர் சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனை திரை நட்சத்திரங்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். ரசிகர்களும் பிராத்தனை செய்து வருகின்றனர்.

கால் முறிவுக்கு சிகிச்சை பெறும் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பியுள்ளார். விரைவில் குணமடைந்து ரசிகர்களை சந்திப்பேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் தாம் குணமடைய விரும்பி செய்தி அனுப்பிய ரசிகர்களுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இப்போது எழுந்து அமர்ந்து பேசும் நான் விரைவில் நடந்து வந்து நன்றி கூறுவேன் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன். அவரது வாட்ஸ் அப் ஆடியோவை கேளுங்கள் ரசிகர்களே!

English summary
'I will return soon,' says Kamal Hassan speech through WhatsApp audio

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil