twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தூங்கா வனத்தை இரண்டு மொழிகளில் 60 நாட்களில் எடுத்துட்டோம்!- கமல் பெருமிதம்

    By Shankar
    |

    எப்போதும் நடைபெறும் ஆடியோ வெளியீடு போன்று இல்லாமல், தூங்கா வனத்துக்கு கொஞ்சம் வித்தியாசமாக ஏற்பாடு செய்திருந்தார்கள் கமல் ஹாஸனும் அவர் குழுவும்.

    கொஞ்சம் நெடிய ட்ரைலர்தான். ட்ரைலரையும் பாடலையும் பார்த்தபிறகு, அதைப் பாராட்டி.. வாழ்த்த விஐபிக்களை மேடைக்கு அழைக்கவில்லை. மாறாக அவர்கள் இருக்கும் இடத்துக்கே மைக்கைக் கொடுத்து பேசச் சொன்னார்கள்.

    இன்னொன்று, இந்த நிகழ்ச்சியை முழுக்க முழுக்க ஒரு ஹெலிகேமை வைத்துப் படமாக்கினார்கள். அந்த ஹெலி தலைக்கு மேல் பறந்தபடி நிகழ்ச்சியை சுட்டுத் தள்ளியது.

    Kamal and his crew shot Thoonga Vanam in 60 days

    இந்த விழா, உலகம் முழுவதும் இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதுமட்டுமில்லாமல், நிறைய திரையரங்குகளிலும், நேரடியாக ஒளிபரப்பட்டது.

    இறுதியில், கமல் மட்டும் மேடையேறி, படம் குறித்து பேசி, படத்தில் பணிபுரிந்த அனைவரையும் மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார்.

    கமல் பேச்சிலிருந்து...

    ‘தூங்காவனம்' படம் 40 நாட்களில் எடுக்கப்பட்டது, 38 நாட்களில் எடுக்கப்பட்டது என ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கிறார்கள். உண்மையைச் சொல்லவேண்டுமானால், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக எடுக்கப்பட்டுள்ளது.

    இரண்டு மொழிகளிலும் எடுக்க வேண்டுமானால், ஒரு கார் சீன் வந்தாலும், அதற்கு நம்பர் பிளேட் மாற்றித்தான் மறுபடியும் சீன் வைக்கவேண்டும். அதேபோல், போலீஸ்காரர் வருகிறாரென்றால், தமிழுக்கு ஒரு யூனிபார்ம், தெலுங்குக்கு ஒரு யூனிபார்ம் என மாற்றி மாற்றிதான் எடுக்கவேண்டும்.

    இந்த படத்தை நாங்கள் 52 நாட்களில் எடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துதான் தொடங்கினோம். அதன்படி முடித்தோம். இருந்தாலும், கடைசி நேரத்தில் படத்திற்கு முக்கியமாக சில காட்சிகள் தேவைப்பட்டதால், மேலும் 8 நாட்கள் எடுத்துக் கொண்டோம். ஆக, மொத்தம் இந்த படம் 60 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளிலும் எடுத்துள்ளதால், ஒரு படத்துக்கு 30 நாட்கள் என்று பிரித்துக் கொள்ளலாம்.

    ஏற்கெனவே நான் நடித்த ‘ராஜபார்வை' படத்தை 52 நாட்களுக்குள் எடுத்து முடித்தோம். என்றாலும், தற்போதுள்ள சூழல், விஸ்தாரமான தொழில்நுட்பத்தில் இரண்டு மொழிகளில் ஒரு படத்தை இவ்வளவு சீக்கிரத்தில் எடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. இதற்கு படத்தில் பணிபுரிந்த அனைவரின் ஒத்துழைப்புதான் காரணம்," என்றார்.

    English summary
    Actor Kamal Hassan says that he and his crew have shot Thoonga Vanam in 60 days in Tamil and Telugu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X