»   »  தையல் பிரிச்சாச்சு, ஜிம்முக்கு செல்கிறேன்: கமல் ஹாஸன்

தையல் பிரிச்சாச்சு, ஜிம்முக்கு செல்கிறேன்: கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கால் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ள கமல் ஹாஸன் தற்போது ஜிம்முக்கு சென்று வருகிறார்.

சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் அமெரிக்காவில் பிசியாக இருந்தார் உலக நாயகன் கமல் ஹாஸன். நாடு திரும்பியவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் அவரின் காலில் எலும்பு முறிந்தது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மருத்துவமனை

மருத்துவமனை

அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனை அறையில் இரண்டு பேரின் உதவியுடன் எழுந்து நடந்ததை நகைச்சுவை கலந்தபடி ட்விட்டரில் தெரிவித்திருந்தார் கமல் ஹாஸன்.

ஜிம்

தையல் பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக ஜிம்முக்கு செல்கிறேன். பிசியோவும் செய்கிறேன். நான் நலமடைய எனக்கு துணை நின்றவர்களுக்கு நன்றி என்று கமல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முத்துக்குமார்

பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமாரின் மரண செய்தியை அறிந்த கமல் பிறரை போன்று எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறவில்லை. மாறாக நா.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நனலம்பேணாத் தற்கொலையால் கோபமே என ட்வீட்டியிருந்தார்.

ஏன் கமல்?

ஏன் கமல்?

அது என்ன தற்கொலை என்று கூறுவது என சிலர் கமலின் ட்விட்டர் பதிவு குறித்து சமூக வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். கமல் ஒன்றும் சர்ச்சைக்காக எழுதவில்லை தனது நண்பர் இப்படி உடல்நலத்தை பேணாமல் இறந்துவிட்டாரே என்ற வேதனையில் வந்த வார்த்தைகள் அவை என சிலர் பதில் அளித்துள்ளனர்.

English summary
Kamal Haasan tweeted that, 'Stitches off. Hobbling up to the gym past 2 days. Physio at full swing . Thank you all who persisted & insisted on my getting better soon.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil