»   »  என் ரோல் மாடல் கமல் ஹாஸன்தான்! - நடிகர் விஷால் பேட்டி

என் ரோல் மாடல் கமல் ஹாஸன்தான்! - நடிகர் விஷால் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷால் தமன்னா நடிப்பில் வெளியாகும் படம் கத்திச்சண்டை.. இதன் ப்ரோமோஷனுக்காக இன்று விஷால் ரசிகர்களுடன் லைவ் செய்ய இருப்பதாக ஒரு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது.. அதில் விஷால் கையில் ஒரு பெட்டியை வைத்திருப்பது போன்று ஒரு போட்டோ இருந்தது.

முதல் ஆளாக ஆர்யா தனது கேள்வியை கேட்டார் .. விஷால் உங்க கைல இருக்க பெட்டில 1. புல்லட்ஸ் இருக்கா 2. பழைய 500/1000 இருக்கா 3. பழைய அண்டர் வியர் இருக்கா என்று கேட்டார்.


Kamal is my role model - Vishal

அதற்கு விஷால் புல்லட் புரூப் அண்டர் வியருடன் பழைய நோட்டுகள் இருக்கின்றன என பதில் அளித்தார்.


அடுத்ததாக நடிகர் அருண் விஜய் வந்தார். நடிகர் விஜய் பற்றி உங்கள் கருத்து என்ன கேட்க, விஷாலோ சற்றும் தயங்காமல் 'அவர் என்டர்டைனிங் சூப்பர் ஸ்டார்' என பதில் அளித்தார்.


தன்னுடைய ரோல் மாடல் கமல்ஹாசன் எனவும், தான் நடித்த படங்களில் தனக்கு பிடித்த படம் அவன் இவன் எனவும் பதிலளித்தார்.


சரத்குமார் தயாரிப்பில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு.. சம்பளம் கொடுப்பாங்களா என குத்தலாகக் கேட்டு வைத்தார்.


மேலும் செவன் பௌண்ட்ஸ் எனும் ஆங்கில படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிக்க ஆர்வம் இருப்பதாக தெரிவித்தார்.


கண்டிப்பாக 2017 இல் தனது திருமணம் இல்லை எனக் கூறிய விஷால், தனக்குப் பிடித்த இடம் மேகமலை எனவும், விஜய் படங்களில் தனக்கு பூவே உனக்காக பிடிக்கும் எனவும், கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் வெள்ளை ராஜா கருப்பு ராஜா படம் விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

English summary
In Kaththi Sandai promotion event, actor Vishal says that Kamal Hassan is his role model.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil