»   »  விஸ்வரூபம் படத்தால் ரூ 60 கோடி நஷ்டம்! - சொல்கிறார் கமல் ஹாஸன்

விஸ்வரூபம் படத்தால் ரூ 60 கோடி நஷ்டம்! - சொல்கிறார் கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஸ்வரூபம் படத்தால் தனக்கு ரூ 60 கோடி இழப்பு ஏற்பட்டதாக கமல் ஹாஸன் பேட்டியளித்துள்ளார்.

கமல் இயக்கித் தயாரித்து 2013-ம் ஆண்டில் வெளியான படம் 'விஸ்வரூபம்'. முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாகக் கூறி, பல அமைப்புகளும் 'விஸ்வரூபம்' வெளியீட்டிற்குத் தடை கோரின.


தொடர்ந்து சர்ச்சைகள் நீடித்ததாலும், திரையரங்குகளுக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாலும் படத்தை தற்காலிகமாக தடை செய்தது தமிழக அரசு. பின்னர் தடை விலக்கப்பட்டு, படமும் திரையிடப்பட்டது.


Kamal losses Rs 60 cr from Vishwaroopam

அந்தப் படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்ததாக விளம்பரம் செய்யப்பட்டது. 100 கோடி, 200 கோடி என ஆளாளுக்கு கணக்கு சொன்னார்கள். கமல் ஹாஸன் கேரியரில் மிகப் பெரிய வசூல் தந்த படம் என்று, ட்விட்டர் புலிகள் கணக்கு கொடுத்திருந்தனர்.


ஆனால் கமல் ஹாஸனோ, அந்தப் படத்தால் தனக்கு ரூ 60 கோடிகள் இழப்பு என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.


சமீபத்தில் பேட்டியொன்றில் அவர் இப்படிக் கூறியுள்ளார்:


"எனது 'விஸ்வரூபம்' படத்திற்குத் தடை விதிக்கப்பட்டபோது, சட்டப் போராட்டத்தின் வாயிலாகத் தடையை நீக்கப்பெற்றோம்.


ஆனாலும், அப்போது ஆட்சியிலிருந்த அரசு படத்தை மீண்டும் தடை செய்தது. மக்கள் ஆதரவு பெருகிய பின்னரே படத்தின் மீதான தடையை அவர்கள் நீக்கினர். இதனால் எனது நிதிநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அவர்கள் திட்டமும் அதுவே.


எனது சொத்துகள் அனைத்தையும் அடகு வைத்தேன். நான் பணிவானவன் என்றே அறியப்பட விரும்பினேன். ஆனால், அவமானத்துக்குள்ளானேன். கிட்டத்தட்ட நொறுக்கப்பட்டேன். அம்னீஸியா என்ற மறதி நோய் நமது தேசத்தில் புரையோடிக் கிடக்கிறது.


ஊழலில் திளைத்திருக்கும் ஒரு தேசத்தில் எனக்கு நேர்ந்தது போன்ற சம்பவங்கள் எளிதாக மறக்கப்படும். எப்போதுமே வரி ஏய்ப்பு செய்திராத நான் ரூ.60 கோடி இழந்தேன். மக்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர்களே என்னை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர்.


'விஸ்வரூபம் 2'ம் பாகத்துக்குச் சிக்கல்கள் வராது என நான் நம்புகிறேன். இருந்தாலும்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம் அல்லவா?" என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.


உண்மையில் விஸ்வரூபம் படத்தால் ரூ 60 கோடி நஷ்டம் என்றால், கமல் படங்களிலேயே மிகப் பெரிய தோல்விப் படம் இதுதான் எனலாம்!

English summary
Actor Kamal Hassan says that he has incurred a loss of Rs 60 cr from his 2013 release Vishwaroopam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil