மீண்டும் சினிமாவில் பிஸியாகும் கமல்...இயக்க தயாராகும் பா.ரஞ்சித், வெற்றிமாறன்

சென்னை : கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் காரைக்குடியிலும், இரண்டாம் கட்ட ஷுட்டிங் புதுச்சேரியிலும் நடத்தப்பட்டது.

மூன்றாம் கட்ட ஷுட்டிங்கை சென்னையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் மியூசியசத்தில் நடத்த திட்டமிட்டு, சென்னை போலீசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை காரணம் காட்டி விக்ரம் படத்தின் ஷுட்டிங்கிற்கு அனுமதி மறுத்து விட்டனர்.

விக்ரம் கிளான்ஸ் சாதனை

விக்ரம் கிளான்ஸ் சாதனை

இதனால் போலீஸ் மியூசியத்தில் எடுக்க திட்டமிட்டிருந்த காட்சிகளை வேறு இடத்தில் எடுக்க லொகேஷன் தேடி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் ஃபஸ்ட் கிளான்ஸ் வெளியிடப்பட்டது. இது 24 மணிநேரத்திற்குள் 10 மில்லியன் பார்வைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

சினிமாவில் பிஸியாகும் கமல்

சினிமாவில் பிஸியாகும் கமல்

நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் நடிக்கும் படம் என்பதால் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கமல் மீண்டும் சினிமாவில் பிஸியாகி, அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். இந்தியன் 2 வழக்கு முடிவுக்கு வந்து விட்டதால் விக்ரம் படத்தை முடித்த கையோடு கமல், இந்தியன் 2 படத்தின் வேலைகளை துவக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியன் 2 எப்போது

இந்தியன் 2 எப்போது

ஆனால் டைரக்டர் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து தெலுங்கில் இயக்கி வரும் ஆர்சி 15 படத்தில் பிஸியாக இருப்பதால், அதை முடித்த பிறகே இந்தியன் 2 படத்தை மீண்டும் துவக்க திட்டமிட்டுள்ளாராம். இதனால் இந்தியன் 2 படத்திற்கு முன் வேறு சில படங்களில் நடிக்க கமல் தயாராகி வருகிறாராம். வரிசையாக அடுத்தடுத்த படங்களுக்கும் கமல் ஓகே சொல்லி வருவதாக கூறப்படுகிறது.

Recommended Video

25 Years Of Avvai Shanmughi | Rewind Raja | Filmibeat Tamil
பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்

பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்

இதில் முதல் கட்டமாக டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க போகிறாராம் கமல். விக்ரம் படத்தை முடித்த உடன் பா.ரஞ்சித் படத்திலும், அதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் கமல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பிறகே இந்தியன் 2 படத்தில் நடிக்க போகிறாராம். அதே சமயம் தற்போது விடுதலை படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அதை முடித்து விட்டு சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்க போகிறார். வாடிவாசலுக்கு பிறகு கமல் உடனான படத்தை வெற்றிமாறன் துவக்குவார் என்றும் கூறப்படுகிறது.

தேவர்மகன் 2 வேறு இருக்கு

தேவர்மகன் 2 வேறு இருக்கு

இந்தியன் 2 படத்தை முடித்த பிறகோ அல்லது அதற்கு முன்பாகவோ மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம் கமல். இந்த படத்தில் கமலே கதை, திரைக்கதை எழுதி வருகிறாராம். அநேகமாக இது தேவர்மகன் 2 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. தேவர்மகன் 2 படத்திற்கு தலைவன் இருக்கிறான் என பெயரிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X