»   »  இவர் யாரென்று தெரிகிறதா.... அந்த பல்ராம் நாயுடுதான்!

இவர் யாரென்று தெரிகிறதா.... அந்த பல்ராம் நாயுடுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேற்று 'மீண்டும் வரும் இவர் யாரென்று தெரிகிறதா?' என்ற வாசகத்துடன் கமல் ஹாஸனின் மூன்று படங்களின் தொடக்க விழா போஸ்டர்கள் வெளியாகின.

இன்று அவர் யாரென்பது தெரிந்துவிட்டது.

தசாவதாரத்தில் கமல் ஹாஸன் ஏற்று நடித்த பத்து வேடங்களில் ரசிகர்களைக் கவர்ந்த வேடம் பல்ராம் நாயுடு.

Kamal to replay Balram Naidu character

தெலுங்கு பேசும் உயர் போலீஸ் அதிகாரியாக வந்து கமல் கலக்கிய பாத்திரம் அது. அதில் பல்ராம் நாயுடு என்ற பாத்திரம் மட்டும்தான் இருந்தது. அந்த பல்ராம் நாயுடுவின் குடும்பப் பின்னணியெல்லாம் இருக்காது.

அதையெல்லாம் சேர்த்து ஒரு ஸ்க்ரிப்டை கமல் உருவாக்கியிருக்கிறார். அதுதான் இந்தப் புதிய படம்.

படத்தில் கமலுக்கு மகளாக நடிப்பவர் ஸ்ருதி ஹாஸன். பிரமானந்தம், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் தொடக்கவிழா நாளை நடக்கிறது.

English summary
Remember Balram Naidu? The hilarious Telugu investigative officer played by Kamal Haasan in Dasavatharam, he will be the protagonist in the film and this time, we will get to know about his family.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil