twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் பற்றி இதெல்லாம் இதுவரை தெரியாதே...அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்

    |

    சென்னை : சோஷியல் மீடியா, மீடியாக்கள் என அனைத்திலும் விக்ரம் படம் பற்றிய பேச்சாக தான் உள்ளது. இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். படத்தின் டிக்கெட் புக்கிங் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    படத்தின் ப்ரீ ரிலீஸ் விற்பனையிலேயே விக்ரம் படம் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது. சினிமாவிற்கு வந்தது முதல் தற்போது வரை கமல் இதுவரை நடித்த படங்களிலேயே ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே இத்தனை கோடி லாபம் பார்த்த படம் விக்ரம் தான் என சொல்லப்படுகிறது. இதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் பீஸ் படமாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கும் இந்த படத்தின் ப்ரொமோஷனின் போது கமல் பற்றி இதுவரை தெரியாத பல அரிய தகவல்களை அவரே வெளியிட்டுள்ளார். அப்படி அவர் வெளியிட்ட 5 தகவங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

    இந்த ஊரில் மட்டும் விக்ரம் முக்கூட்டியே ரிலீசாகுதாம்...கொடுத்து வைத்த ரசிகர்கள் இந்த ஊரில் மட்டும் விக்ரம் முக்கூட்டியே ரிலீசாகுதாம்...கொடுத்து வைத்த ரசிகர்கள்

     நான்கு ஆண்டு கேப்

    நான்கு ஆண்டு கேப்

    2019 ல் விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கமல் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். கமலின் சினிமா வரலாற்றிலேயே இவ்வளவு நீண்ட இடைவெளி எடுத்தது இதுவே முதல் முறை. இதை ஒப்புக் கொண்ட கமல், இந்த 4 ஆண்டு கால இடைவெளி மிக முக்கியமானது. அதற்குள் கட்சி ஆரம்பித்து, தீவிர அரசியலுக்காக அதை பயன்படுத்திக் கொண்டுள்ளதாக சொன்னார்.

    கமல் இழந்த வாய்ப்பு

    கமல் இழந்த வாய்ப்பு


    தேவர் மகன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய கமல் நினைத்த போது. சிவாஜி நடித்த ரோலில் இந்தி நடிகர் திலிப்குமாரை தான் நடிக்க வைக்க நினைத்துள்ளார். அவர் அந்த சமயத்தில் நடிப்பை நிறுத்தி இருந்ததால், கமல் சென்று கேட்ட போது அவர் நடிக்க மறுத்து விட்டாராம். இதனால் திலிப்குமாருடன் நடிக்கும் வாய்ப்பு கமலுக்கு கிடைக்காமல் போனதாம்.

     60 ஆண்டு கால திரை பயணம்

    60 ஆண்டு கால திரை பயணம்

    1959 ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், முதல் படத்திலேயே தேசிய விருதினை வென்றார். இதுவரை 200 க்கும் அதிகமான படங்களில் நடித்து பல விருதுகளை வாங்கி உள்ளார். இந்த 60 வருட திரை பயணத்தில் நல்லது, கெட்டது இரண்டுமே பாடம் தான். அபாடத்தை கற்றுத் தந்த ஆசிரியர்களுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

    பாலச்சந்தரால் அடையாளம் காட்டப்பட்டது

    பாலச்சந்தரால் அடையாளம் காட்டப்பட்டது

    நடிப்பது மட்டுமின்றி, தயாரிப்பாளர், இயக்குனராகவும் கமல் இருந்துள்ளார். தான் நடித்த பல படங்களில் தானே அசிஸ்டென்ட் டைரக்டராகவும் இருந்து டைரக்ஷன் கற்றுக் கொண்டுள்ளார். 18 வயதிலேயே கமலின் பலம் மற்றும் படைக்கும் திறமையை கண்டுபிடித்து அதை வளர்த்துள்ளார் கே.பாலச்சந்தர். கே.பாலச்சந்தரை தனது வழிகாட்டி, குரு குறிப்பிட்ட கமல், அவருடன் இணைந்து கிட்டதட்ட 36 படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டராக கமல் பணியாற்றி உள்ளார்.

    குழந்தை பருவ நினைவுகள்

    குழந்தை பருவ நினைவுகள்

    தனது ஏழாவது வயதில் நடிக்க வந்தார் கமல். குழந்தை நட்சத்திரமாக எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார் கமல். அப்போது அவருடைய முன் பற்கள் இரண்டும் விழுந்ததால் குழந்தை நட்சத்திரமாக தொடரும் வாய்ப்பை கமல் இழந்துள்ளார். சிறு வயது என்பதால் மீண்டும் எப்படி வாய்ப்பு பெறுவது என்ற வழி தனக்கு தெரியவில்லை என்றார் கமல். பெரிய நடிகர்களுடன் நடிப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது கூட அப்போது புரியவில்லை என்றார் கமல்.

    English summary
    During Vikram movie promotion Kamalhaasan revealed on the unknown facts on his film industry journey. Here we listed out the 5 unknown facts of kamal. Fans of Kamal are now immersed in Vikram fever. In pre release sales, this film earning of Rs.200 crore.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X