பலூன் சாட்டிலைட்டில் கமல் சிலை...பெருமையுடன் பகிர்ந்த உலகநாயன்

சென்னை : உலகநாயகன் கமலஹாசனின் 67 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஸ்பெஷலாக கொண்டாட கமல் ரசிகர்கள், திரைத்துறையினர் என பலரும் பலவிதங்களில் திட்டமிட்டுள்ளனர்.

விக்ரம் படக்குழுவினர் நேற்றே இந்த படத்தின் ஃபஸ்ட் கிளான்சை வெளியிட்டு அசத்தி விட்டனர். கடந்த வாரமே செட்டில் கேக் வெட்டி, கமலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கமலின் பிறந்தநாள் ஸ்பெஷலாகவும், அவரை கெளரவிக்கும் விதமாகவும் கமல் ரசிகர்கள் சிலர் புதிய முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பலூன் சாட்டிலைட்

பலூன் சாட்டிலைட்

Space kidz India என்ற தனியார் அமைப்பினர் இரண்டு பலூன் சாட்டிலைட்டை உருவாக்கி அனுப்பி உள்ளனர். வளிமண்டலத்தில் காற்றின் தன்மையை அளவிடுவதற்காகவும், அதன் மாறுபாட்டை கணித்து தகவல் சேகரிப்பதற்காகவும் இந்த சாட்டிலைட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவை 70,000 அடிக்கும் மேல் பறந்து காற்றின் தன்மையை அளவிட உள்ளன.

சாட்டிலைட்டில் கமலின் சிலை

சாட்டிலைட்டில் கமலின் சிலை

இந்த இரண்டு சாட்டிலைட்களில் 3டி பிரிண்டிங் முறையிலான கமலின் சிலை பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாட்டிலைட்களில் ஒன்று தீபாவளியான நவம்பர் 4 ம் தேதியும், மற்றொன்று நவம்பர் 5 ம் தேதியும் பறக்க விடப்பட்டன. இது சென்னையில் உள்ள Spaceport India ல் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பிறகு காற்றின் தன்மை எப்படி உள்ளது என்பது பற்றி ஆராய்வதற்காக இந்த சாட்டிலைட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கமலின் தீவிர ரசிகர்

கமலின் தீவிர ரசிகர்

டாக்டர் ஸ்ரீமதி கேசன் தலைமையிலான குழுவினர் தான் இந்த சாட்டிலைட்டை தயாரித்துள்ளனர். இந்த குழுவை சேர்ந்த எஸ்.பி.அர்ஜுன், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இருப்பவர். இவர் கமலின் தீவிர ரசிகரும் கூட. Space kidz India இதற்கு முன் 2015 ல் உலகின் மிகச் சிறிய சாட்டிலைட்டான கலாம்சாட் என்ற சாட்டிலைட்டை உருவாக்கியவர்கள். இந்த சாட்டிலைட் நாசாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இதுவரை 15 பலூன் சாட்டிலைட்களை இவர்கள் உருவாக்கி உள்ளனர்.

முதல் மனிதர் கெளரவம்

முதல் மனிதர் கெளரவம்

பலூன் சாட்டிலைட்டில் முதல் மனிதர் 3டி பிரிண்டட் சிலை பொருத்தப்பட்டுள்ளது கமலுக்கு தான். பலூன் சாட்டிலைட்டில் உலகத்திலேயே இதுவரை யாருடைய உருவமும் இடம்பெற்றது கிடையாது. இது கமலுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய கெளரவம் ஆகும்.

பெருமையுடன் சொன்ன கமல்

பெருமையுடன் சொன்ன கமல்

பலூன் சாட்டிலைட்டில் தன்னுடைய 3டி பிரிண்டிங் சிலை பொருத்தப்பட்டுள்ள தகவலை பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட்டில் கமலே பெருமையாக, போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். மற்றொரு பலூன் சாட்டிலைட் நவம்பர் 7 ம் தேதி அனுப்பப்பட உள்ளதாகவும் கமல் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X