»   »  இனி அதிகபட்சம் 40 நாட்கள்தான்! - கமலின் புது முடிவு

இனி அதிகபட்சம் 40 நாட்கள்தான்! - கமலின் புது முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

இனி ஒரு படத்தின் ஷூட்டிங்கை 100 நாட்கள், 200 நாட்கள் என இழுக்கப் போவதில்லை. அதிகபட்சம் நாற்பது நாட்களில் முடிக்கப் போகிறேன், என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாஸன் படங்கள் முன்பெல்லாம் நூறுக்கும் அதிகமான நாட்களுக்கு படப்பிடிப்பு நடப்பது வழக்கம். ஆனால் அவரது சமீபத்திய படமான பாபநாசம் வெறும் 40 நாட்களில் எடுக்கப்பட்டு, நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.

இப்போது அவர் நடித்து வரும் தூங்கா வனம் படத்தின் படப்பிடிப்பும் நாற்பது நாட்களுக்குள் முடிக்கப்பட்டுவிட்டது. விரைவில் வெளியாகத் தயாராகி வருகிறது.

Kamal's new decision in movie shooting

இப்போது மட்டும் எப்படி நாற்பது நாட்களில் படம் எடுக்க முடிகிறது?

இதற்கு கமல் கூறும் பதில் இது:

இத்தனை நாட்கள் ஒரு தவறான பாதையில் போய்க் கொண்டிருந்தோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். 100 நாட்கள், 200 நாட்கள் படமெடுத்தால்தான் பிரமாண்டம் காட்ட முடியும் என்று சொன்னதைக் கேட்டு அப்படி எடுத்தோம். ஆனால் ஹாலிவுட்டில் 50 நாட்களுக்குள் ஜேம்ஸ்பாண்ட் படங்களையே எடுத்து முடித்துவிடுகிறார்கள்.

எனவே இருநூறுநாட்கள் எதற்குப் படப்பிடிப்பு நடத்தவேண்டும்... படமே அதிகபட்சம் நூறுநாட்கள்தான் ஓடுகிறது.

எனவே இனிவரும் படங்களையும் இதேபோல் குறுகிய காலத்தில் வேகமாக எடுத்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்," என்றார்.

English summary
Actor Kamal Hassan has decided to make his films in short duration hereafter.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil