twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல்ஹாஸனின் டாப் 5 பாக்ஸ் ஆபீஸ் ஹிட்ஸ்!

    By Shankar
    |

    கமல்ஹாஸன் என்றால் மிகச் சிறந்த நடிப்பு, புதிய கோணத்தில் படமாக்கம், கலை நேர்த்தி போன்றவற்றைத்தான் பிரதானமாகப் பேசுவார்கள். வசூல் இரண்டாம்பட்சம்தான்.

    ஆனால் கமல் படங்களும் வசூலில் பெரிய சாதனைப் படைத்தவைதான். பல வெள்ளிவிழாக்கள் கண்டவைதான். கமல் ஹாஸனின் கேரியரில் மிகச் சிறந்த வசூலைக் குவித்த 5 படங்களை இங்கே பார்ப்போம்.

     கல்யாணராமன்

    கல்யாணராமன்

    ஜிஎன் ரங்கராஜன் இயக்க, இளையராஜா இசையில் வெளியான படம் இது. பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் உருவாகியிருந்தது. பாடல்கள் பட்டையைக் கிளப்பின அன்றைய நாட்களில். இன்று கேட்டாலும் தித்திக்கும் மலர்களில் ஆடும் இளமை, காதல் வந்துருச்சி... பாடல்கள். வெள்ளிவிழா மட்டுமல்ல.. வசூலிலும் சாதனை படைத்த படமிது.

     சகலகலா வல்லவன்...

    சகலகலா வல்லவன்...

    எண்பதுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முரட்டுக் காளை முத்திரைப் படமாக அமைந்ததென்றால், அதற்கு நிகராக கமலுக்கு அமைந்த படம் சகலகலா வல்லவன். பழைய எம்ஜிஆர் படத்தின் ரீமேக்தான் இது. ஆனால் அதிரடி மசாலா... அதற்கேற்ப பட்டி தொட்டியெங்கும் கலக்கல் வசூல்.

    கிராமங்களிலிருந்து வண்டி கட்டிக் கொண்டு போய் பக்கத்திலுள்ள சிறு நகரங்களில் மக்கள் படம் பார்த்தது இன்னும் கண்ணில் நிற்கிறது. மிகச் சிறிய பட்ஜெட்டில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார் இயக்குநர் எஸ்பி முத்துராமன்.

     அபூர்வ சகோதரர்கள்

    அபூர்வ சகோதரர்கள்

    கமல்ஹாஸன் கேரியரில் மறக்க முடியாத வசூலைத் தந்த படம் இது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார். தொழில்நுட்பம், படமாக்கம், இசை என பல வகையிலும் அருமையாக வந்திருந்தது அபூர்வ சகோதரர்கள். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், இளையராஜா இசையில், தமிழ் சினிமாவில் இடம்பிடித்த முக்கியப் படம் இது.

     நாயகன்

    நாயகன்

    இந்தப் படம் காட் பாதரின் காப்பி என விமர்சிக்கப்பட்டாலும், அந்த விமர்சனங்களை இடது கையால் புறம் தள்ள வைத்தது இரண்டு விஷயங்கள்.
    ஒன்று கமல் எனும் கலைஞனின் காலத்தை வென்ற நடிப்பும், இசைஞானியின் ஜீவ இசையும்தான்.

    இந்தப் படத்தின் ஆரம்ப வசூல் அத்தனை திருப்தியாக இல்லை. ஆனால் நாளாக நாளாக தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூண்டது தனிக்கதை.

     தேவர் மகன்

    தேவர் மகன்

    கமல் படங்களிலேயே வசூலிலும் வெற்றியிலும் தனி முத்திரைப் பதித்த படம் தேவர் மகன். ஒவ்வொரு காட்சியும் க்ளாஸ் எனும் அளவுக்கு பரதனின் இயக்கமும் கமலின் திரைக்கதையும் அமைந்திருந்தன. இளையராஜாவின் இசை ராஜ்யம் இந்தப் படத்திலும் கொடி கட்டிப் பறந்தது.

    இந்தப் படங்களுக்குப் பிறகு வந்தவற்றில் இந்தியன், அவ்வை சண்முகி, தசாவதாரம் போன்றவையும் நல்ல வசூலைக் குவித்தவையே. ஆனால் Mass with Class என்று பார்த்தால் மேற்கண்ட ஐந்தையும் எந்த விவாதமின்றி ஒப்புக் கொள்வார்கள், மாற்று முகாம் ரசிகர்களும்!

    English summary
    Here is the list of all time blockbuster movies of Kamal Hassan in Box office.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X