»   »  என்ன தலைவா இப்படி பண்ணிட்டீங்களே: கமல் ட்வீட்டை பார்த்து முகம்சுளித்த ரசிகர்கள்

என்ன தலைவா இப்படி பண்ணிட்டீங்களே: கமல் ட்வீட்டை பார்த்து முகம்சுளித்த ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் மறைவையொட்டி கமல் ஹாஸன் போட்டுள்ள ட்வீட் அவரது ரசிகர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது.

கமலின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்ததும் அதையடுத்து நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கமல் குமுறியதும் அனைவருக்கும் நினைவிருக்கும்.

Kamal's tweet irks his fans

நான் எப்பொழுது நாட்டை விட்டு போகிறேன் என்றேன் என பின்னர் கமல் கூறியதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஜெயலலிதாவின் மறவையொட்டி அவர் போட்ட ட்வீட் அவரது ரசிகர்களையே கடுப்படைய வைத்துள்ளது.

சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என ட்வீட்டினார் கமல்.

இதை பார்த்த கமல் ரசிகர்களே, என்ன தலைவா இப்படி செய்துவிட்டீர்கள். இறந்தவருக்கு மரியாதை அளிக்க வேண்டாமா. என்ன இருந்தாலும் இப்படி ட்வீட் செய்திருக்கக் கூடாது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு கமலை கடுமையாக விமர்சித்துள்ளனர். சிலர் அவரை கிண்டல் செய்துள்ளனர்.

English summary
Kamal Haasan's tweet about Jaya's demise has irked his fans who expect him to write a poem on her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil