திடீரென வீட்டை மாற்றிய கமல்... காரணம் என்னன்னு தெரியுமா ?
சென்னை : கமல் இதுநாள் வரை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள தனது பாரம்பரிய வீட்டில் தனது மகள்களுடன் வசித்து வந்தார். சமீபத்தில் தான் இந்த வீட்டில் சுகாசினி மணிரத்னத்தின் 60 வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்காக கமலின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக கூடி, குதூகலமாக கொண்டாடினர். இவர்கள் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாவில் பரவி செம வைரலானது.

மும்பையில் மூத்த மகள்
இந்த ஃபோட்டோஷுட்டில் கமலும், அவரது இளைய மகள் அக்ஷராவும் மட்டுமே கலந்து கொண்டனர். மூத்த மகள் ஸ்ருதி தற்போது மும்பையில் தனது காதலருடன் வசித்து வருவதால் அவர் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை. அதோடு சமீபத்தில் கமல், மும்பைக்கு சென்று தனது மகள் ஸ்ருதியை சந்தித்து விட்டு சென்னை விமானநிலையம் வந்திறங்கிய வீடியோக்கள் வைரலானது.

காஸ்ட்லி ஏரியாவுக்கு மாறிய கமல்
இந்நிலையில் சென்னையில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா ஸ்டார்கள் அதிகம் வசிக்கும் காஸ்ட்லி ஏரியாவான போட் கிளப் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார் கமல். சென்னையின் டாப் தொழிலதிபர்களும் இந்த பகுதியில் தான் உள்ளனர்.

போட் கிளப் விஐபி.,க்கள்
இந்தியா சிமிண்ட்ஸ் சீனிவாசன், டிவிஎஸ் மோட்டார்ஸ் வேணு ஸ்ரீநிவாசன், முகேஷ் அம்பானியின் மைத்துனர் ஷ்யாம் கோத்தாரி, சன் டிவி கலாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் போட் கிளப் பகுதியில் தான் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் புதிய உறுப்பினராக கமலும் இணைந்துள்ளார்.

புது வீட்டில் கமல்
போட் கிளப் பகுதியில் உள்ள பெரிய அபார்ட்மென்ட்டில் தான் கமல் குடியேறி உள்ளார். கடந்த மாதமே இதற்கான ஏற்பாடுகளை கமல் செய்ய துவங்கி விட்டாராம். சில சென்டிமென்ட் காரணமாக கமல் தனது வீட்டை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இந்தியன் 2
கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடிக்கிறார்கள். விக்ரம் படத்தின் வேலைகளை முடித்த பிறகு, ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 வேலைகளையும் கமல் துவங்க போகிறாராம்.

காரைக்குடியில் கமல்
விக்ரம் படத்தின் ஷுட்டிங்கிற்காக காரைக்குடியில் முகாமிட்டுள்ள கமல், படத்துடன் சேர்த்து பிக்பாஸ் சீசன் 5 ஷுட்டிங்கிலும் பங்கேற்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











