»   »  கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம்- திரிஷாவுக்கு ஆதரவாக பதிவிட்ட கமல்

கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம்- திரிஷாவுக்கு ஆதரவாக பதிவிட்ட கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை திரிஷா அமெரிக்க விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் விளம்பர தூதராக உள்ளார். ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா தான் காரணம் என்பதால் நடிகை திரிஷாவை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இப்படி தரக்குறைவாக பேசுபவர்கள் தமிழர்கள் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும் என்று திரிஷா பதில் அளித்திருந்தார்.

இதனையடுத்து நெட்டிசன்கள் டுவிட்டரில் வறுத்து எடுத்து வருகின்றனர். திரிஷாவை டுவிட்டரில் நெட்டிசன்கள் கருத்துக்களால் வறுத்து எடுப்பதைப் பார்த்து திரை உலக பிரபலங்கள் பலர் திரிஷாவுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்.

கமல் ஆதரவு

கமல் ஆதரவு

ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணியையும் தடை செய்ய வேண்டும் என்று காளைகள் கொல்லப்படுவது பற்றி கருத்து சொன்ன கமலஹாசன், பாவம் அறியாத பெண் தெரியாமல் செய்து விட்டார். அவர் அளவுக்கு நீங்கள் இறங்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.

வாழ வழி செய்வோம்

வாழ வழி செய்வோம்

கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம் என்று தெரிவித்துள்ளார். எனது ஆதரவு எப்போதும் நாகரீகமாக உள்ளவர்களுக்கு மட்டுமே என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

டிவி தொகுப்பாளின் பாவனா

திரிஷாவிற்கு ஆதரவாக விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். டுவிட்டரில் இது போன்று பதிவிடுபவர்கள் கோழைகள். தங்களை யார் என்று வெளிக்காட்டி கொள்ளாமல் மறைமுக அடையாளங்கள் மூலம் தாக்குவார்கள். இதை பெரிதுபடுத்தாமல் நீங்கள் உறுதியாக இருங்கள் திரிஷா என்று நம்பிக்கை அளித்துள்ளார்.

தமிழன் என்பதில் பெருமை

நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் அதே நேரத்தில் இதுபோன்று அடுத்தவர்களை காயப்படுத்தும் கருத்துக்களை பதிவிடுவதற்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன் என்றும் பாவனா குறிப்பிட்டுள்ளார்.

ராதிகா பதிவு

திரிஷாவிற்கு ஆதரவாக ராதிகா, சின்மயி ஆகியோரும் கருத்து கூறியுள்ளனர். இதற்கும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உடனே ராதிகா, நானும் சரத்குமாரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானவர்களே என்றும் 2014ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக அவர் போராட்டம் நடத்தியிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

English summary
Trisha, on Saturday, clarified she never spoke against the ancient and popular bull-taming sport.Despite clarifying her stand, the came under fire on social media.Her colleagues were quick to come to her rescue.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil