»   »  இந்தியன் 2.... ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்க திட்டமிடும் கமல்!

இந்தியன் 2.... ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்க திட்டமிடும் கமல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்க திட்டமிடும் கமல்! | மறுத்த நயன் தாரா, அனுஷ்கா!-வீடியோ

சென்னை: அரசியலில் இறங்குவதற்கு ஆழம் பார்த்துக்கொண்டிருக்கிறார் கமல். பிக்பாஸ் முதல் திருமண நிகழ்ச்சி வரை எதையும் விட்டு வைக்காமல் அரசியல் பேசி அதற்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை கவனித்து வருகிறார். கம்யூனிஸ்ட் தலைவர்கள், விவசாய சங்கத்தினரை தொடர்ந்து இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க இருக்கிறார்.

இப்போதைய சூழலில் கமலுக்கு தேவை இரண்டு விஷயங்கள். சினிமாவில் தோல்விகளும் தடைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. விஸ்வரூபம் ரிலீஸில் பிரச்னை இன்னும் நீடிக்கிறது. சபாஷ் நாயுடு மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. எனவே சினிமா கேரியரில் ஒரு ஹிட்டாவது உடனடியாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Kamal takes Indian 2 project

ஷங்கருடன் இணைந்தால் லைக்கா நிச்சயம் தயாரிக்கும். அதிலும் இந்தியன் பார்ட் 2 என்றால் எதிர்பார்ப்பு எகிறும். எனவே தான் இந்தியன் 2 வைக் கையில் எடுத்திருக்கிறாராம்.

அதோடு என்னதான் ட்விட்டரில் போர் புரிந்தாலும் களத்தில் மக்களிடம் நல்ல இமேஜ் உருவாக இந்தியன் பார்ட் 2 உதவியாக இருக்கும். எனவே இன்றைய அரசியலையும் திரைக்கதையில் நுழைக்க ஷங்கரைக் கேட்டுக்கொண்டுள்ளாராம்.

ஆக, ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்க திட்டமிட்டுள்ளார்.

English summary
Kamal Haasan has chosen Indian 2 project with Shankar for his political entry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil