குணமாகிவிட்டார்...மீண்டு(ம்) வருகிறார் கமல்....மருத்துவமனை அறிக்கையால் குஷியான ரசிகர்கள்

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த நான்கு ஆண்டுகளாக கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படம், அரசியல் என பிஸியாக இருந்து வந்த கமல், சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்தார். இந்தியா திரும்பிய இரண்டு நாட்களில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் தனிமைபடுத்திக் கொண்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன்

கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன்

இதனால் கடந்த வாரம் பிக்பாஸில் வார இறுதி எபிசோட்களை தொகுத்து வழங்க கமல் வரவில்லை. இருந்தாலும் மருத்துவமனையில் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் பேசி, தான் நலமாக இருப்பதாக சொன்ன கமல், தனக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறினார்.

கடுப்பான ரசிகர்கள்

கடுப்பான ரசிகர்கள்

ஆனால் ரம்யா கிருஷ்ணன் ஒரு தலைபட்சமாக பேசுவதாகவும், அவர் தொகுத்து வழங்குவது தங்க வேட்டை நிகழ்ச்சியையும், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் ஞாபகப்படுத்துவதாக ஏராளமானோர் சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்திருந்தனர். கமல் சீக்கிரம் குணமாகி வர வேண்டும், கமல் சார் எப்போ வருவீங்க என கேட்க துவங்கி விட்டனர்.

கமல் பற்றி பரவிய வதந்தி

கமல் பற்றி பரவிய வதந்தி

கமலின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கை வெளியிட்டு வந்த நிலையில், சிகிச்சை முடிந்து கமல் வீடு திரும்பி விட்டதாக சோஷியல் மீடியாக்களில் வதந்தி பரவியது. அதோடு குடும்பத்தினர் ஆரத்தி எடுக்கும் கமலின் பழைய ஃபோட்டோ ஒன்றும் வைரலானது. இதனையடுத்து, கமல் இன்னும் மருத்துவமனையில் தான் உள்ளார் என மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.

கமல் குணமாகி விட்டார்

கமல் குணமாகி விட்டார்

இந்நிலையில் கமல் சிகிச்சை பெற்று வரும் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், நவம்பர் 22 ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான கொரோனா தொற்று இருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் பூரணமாக குணமடைந்து விட்டார்.

மீண்டும் வருகிறார் கமல்

மீண்டும் வருகிறார் கமல்

இருந்தாலும் டிசம்பர் 3 ம் தேதி வரை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும் படி கமலுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ம் தேதி முதல் அவர் வழக்கமான பணிகளை தொடர சரியாகி விடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டு விட்டதால் இந்த வார சனிக்கிழமையான டிசம்பர் 4 ம் தேதி பிக்பாஸ் எபிசோடை தொகுத்து வழங்க கமல் வந்து விடுவார் என கூறப்படுகிறது.

வாழ்த்துக்களை குவித்த ரசிகர்கள்

வாழ்த்துக்களை குவித்த ரசிகர்கள்

மருத்துவமனையில் இருந்தபடியே நேற்று 83 படத்தின் தமிழ் பதிப்பு டிரைலரை ட்விட்டரில் வெளியிட்டார் கமல். இதை பார்த்ததும் ரசிகர்கள் குஷியாகி விட்டனர். சீக்கிரம் குணமடைந்து திரும்பி வர வேண்டும் என கமலுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X