twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோ .. ஹீரோ ..

    By Staff
    |

    கடந்த 15 ஆண்டுகளாக சிகரெட் பிடிக்கும் காட்சிகள் என் படங்களில் இல்லை, இனியும் இருக்காது என்று நடிகர்கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    திரைப்படங்களில், குறிப்பாக இந்தியாவில் வெளியாகும் இந்தியத் திரைப்படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள்அதிகம் வருவதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்தப் படங்களைப் பார்க்கும் இளைஞர்களும், சிறுவர்களும் இதன் பாதிப்பாகத்தான் சிகரெட் பிடிக்கத்தொடங்குகின்றனர் என்றும் அந்நிறுவனம் கவலை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் இனி வரும் தன்னுடைய படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இருக்காது என்று கமல்உறுதி அளித்துள்ளார்.

    சென்னை-அடையாறு புற்று நோய் ஆராய்ச்சிக் கழகத்தின் 20ஆம் ஆண்டு விழாவையொட்டி பொதுமக்களிடம்நிதி திரட்டுவதற்கான கூப்பன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூப்பனை வெளியிட்டு கமல்பேசுகையில்,

    புற்று நோய் ஆராய்ச்சிக் கழகத்திற்காகத் திரட்டப்படும் இந்த நிதி மக்களையே சென்றடைகிறது. ஒரு கூப்பன் ரூ. 20மட்டுமே என்பதால் இது யாருக்கும் ஒரு பெரிய விஷயம் அல்ல.

    கோவில் வாசலில் உள்ள பிச்சைக்காரனுக்கு 10 பைசா போட்டால் அவன்கூட அதை வாங்குவதில்லை. ஆனால்,அவனுக்கு கேன்சர் வந்தால் இந்த புற்று நோய்க் கழகத்திற்குத்தான் வர வேண்டும்.

    நரகத்திலிருந்து மீள என்ன வழி என்று என்னிடம் கேட்டால் இதுபோல உதவுங்கள் என்றுதான் நான் கூறுவேன்.இந்த வழியை அனைவரும் மேற்கொண்டு சொர்க்கத்தைக் காண வேண்டும்.

    என்னுடைய வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை புற்று நோய் ஒழிப்பு நிதிக்காக அழிப்பேன். இதுநாட்டுக்குச் செய்யும் சேவை மட்டுமல்ல, நமக்கு நாமே செய்யும் சேவை ஆகும்.

    சிறிய வயதில் நானும் சிகரெட் பிடித்திருக்கிறேன். ஆனால் சிகரெட் பிடிப்பதால் கேன்சர் வரும்" என்று தெரிந்ததால்அந்தப் பழக்கத்தை அப்போதே நிறுத்தி விட்டேன்.

    கடந்த 15 ஆண்டுகளாக என் படங்களில் நான் சிகரெட் பிடிக்கும் காட்சி எதுவும் வைத்ததில்லை. இனிமேலும் என்படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இருக்காது.

    நம் நாட்டிலுள்ள தந்தைமார்களுக்கெல்லாம் நான் ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். தயவு செய்து சிகரெட்பிடிக்காதீர்கள். அப்படியே பிடித்தாலும் உங்கள் குழந்தைகள் முன் சிகரெட் பிடிக்காதீர்கள். நீங்கள் சிகரெட்பிடிக்கவில்லை என்றால் உங்கள் குழந்தைகளும் சிகரெட் பிடிக்க மாட்டார்கள் என்றார் கமல்.

    முன்னதாக கமல் வெளியிட்ட கூப்பனை தொழிலதிபர் கோதண்டராமன் பெற்றுக் கொண்டார். பிரபல சினிமாதயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் ரூ.500 கொடுத்து 25 கூப்பன்களைக் கமலிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X