twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோ .. ஹீரோ ..

    By Staff
    |

    எய்ட்ஸ் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் பணிகளில் ஈடுபடப் போவதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.சென்னை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் கமல்ஹாசனுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடந்தது. அதில் கமல் பேசியதாவது:இங்கே என் மனம் நெகிழும்படி பலரும் புகழ்ந்து பேசினார்கள். அத்தனைப் பாராட்டுக்களுக்கும் உரியவனாக என்னைஇனிமேல் தான் நான் மாற்றிக் கொள்ள வேண்டும்.நான் அயோத்தியா குப்பத்தில் சில நல்ல காரியங்களை செய்து வருவதாகக் கூறினார்கள். மதக் கலவரம் வராமல் இருக்கரகசியமாய் ஒரு அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் பல நல்ல மனிதர்கள், பெரிய மனிதர்கள் எல்லாம்இருக்கிறார்கள். அதில் நானும் இருக்கிறேன்.

    நான் நல்ல சூழலில் வளர்ந்தேன். எங்கள் வீடு முழுக்க வக்கீல்களாக வலம் வந்தபோது நான் மட்டும் வக்கீலாகவில்லை.படிப்புக்கும் பரிட்சைக்கும் பயந்து தான் நான் சினிமாவுக்கே வந்தேன். பாலசந்தர், பரிட்சை எழுது.. சான்ஸ் தருகிறேன் என்றுசொல்லியிருந்தால் எனக்கு சினிமா சான்ஸ் கிடைத்திருக்காது.சினிமா ரொம்ப அத்யாவசியமான சர்வீஸ் என்று சொல்வதை நான் ஏற்க மாட்டேன். சினிமாவும் கோகோ கோலா மாதிரி தான்.அத்வாயவசியமான தேவையெல்லாம் அல்ல.மக்களை மகிழ்விக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். என் அளவு, உயரம் என்ன என்று எனக்குத் தெரியும்என்றார் கமல்.பின்னர் அவரிடம் கூட்டத்தில் இருந்த பொது மக்கள் கலந்துரையாட வாய்ப்பு தரப்பட்டது. அப்போது கேட்கப்பட்டகேள்விகளுக்கு கமலின் பதில்கள்.

    கேள்வி: உங்களிடம் பாலசந்தரின் பாதிப்பு இருக்கிறதா?கமல்: பாலசந்தர், அனந்து ஆகியோரின் பாதிப்பு என்னிடம் உண்டு. பாலசந்தரிடம் போர்ப் பயிற்சி பெற்றவன் நான். எனக்குவேகத் தடை வேண்டும் என்று ஒரு முறை பாலசந்தர் சொன்னார். நான் வேகம் கற்றதே அவரிடம் தானே.கேள்வி: கடவுள் பற்றி உங்கள் அகராதியில் என்ன அர்த்தம் வைத்திருக்கிறீர்கள்?கமல்: எல்லோரது அகராதியிலும் இருப்பது தான் என் அகராதியிலும் இருக்கிறது. 12 வயது வரை எல்லா கோவில்களுக்கும்போய் சாமி கும்பிட்டவன் தான் நான். ஸ்தல புராண பாடல்கள் பாடியவன். பூஜை அறையில் தினம் அரை மணி நேரம் மந்திரஉச்சாடனம் சொன்னவன். என் 12 வயதில் மாபெரும் புரட்சி செய்தவர் என் தந்தை சீனிவாசன்.அவரிடம் எனக்கு பூணூல் வேண்டாம் என்றேன். அதை அவர் ஏற்றுக் கொண்டார். சில மனிதர்களுக்கு கடவுள்தேவைப்படுவதைப் போல சிலருக்கு தேவைப்படுவதில்லை.கேள்வி: நீங்கள் நடித்ததிலேயே அருமையான படம்?கமல்: போன தீபாவளிக்கு சாப்பிட்டது நல்லா இருந்ததா? என்று கேட்பது போல் இருக்கிறது. என் நினைவில் இப்போது மும்பைஎக்ஸ்பிரஸ் தான்.கேள்வி: திருவள்ளுவராக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?கமல்: திருவள்ளுவர் ஒரு சிக்கலான வரலாறு. அவர் கிருஸ்துவரா? ஜைன மதத்தைச் சேர்ந்தவரா என்ற கேள்விகள் எல்லாம் கூடஉண்டு. அவரை எப்படி சித்தரிப்பது என்பதில் குழப்பங்கள் உள்ளன.கேள்வி: மருதநாயகம்...?பதில்: உங்களைவிட அந்தப் படத்தின் மீது எனக்கு ஆர்வம் உண்டு. அந்தப் படம் ஆரம்பித்த வேகத்தில் வளர்ந்திருந்தால் உலகஅரங்கில் ஒரு தமிழ்ப் படம் அரங்கேற்றம் கண்டிருக்கும்.கேள்வி: இப்போது என்ன வகையான சமூகப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள்?பதில்: இந்தியாவில் 1 கோடி பேருக்கு எய்ட்ஸ் உள்ளது. இந்த நோய்க் கட்டுப்பாடு, விழிப்புணர்வு பரப்புவது குறித்து ஆங்கிலநடிகர் ரிச்சர்ட் கெரே என்னுடன் பேசினார். எங்கள் நற்பணி மன்றத்தின் சேவையைப் பாராட்டிவிட்டு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுபிரச்சாரத்துக்கும் உதவுமாறு கேட்டுக் கொண்டார்.எதிர்காலத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய புதிய பொறுப்பில் நான் சம்பந்தப்பட்டிருப்பேன் என்றார் கமல்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X