படத்திற்கு படம் லேண்ட்மார்க்...அசத்தும் கமல்...குணாவில் குகை...விக்ரமில் என்ன?
சென்னை : தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர், இந்திய சினிமாவின் பெருமை, அடையாளம் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். 67 வயதிலும் பலரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறார்.
நான்கு வருடங்கள் நடிக்கவில்லை என்றாலும் ஒரே படத்தில், இன்றைய இளம் தலைமுறை டாப் ஹீரோக்களை மிரள வைத்து விட்டார் கமல். தனது ஒவ்வொரு படத்திலும் பல புதுமைகளை புகுத்தி, பலவற்றிற்கும் முன்னோடியாக திகழ்கிறார் கமல். பல தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல் தான்.
விக்ரம் படத்திற்கு பிறகு கமலின் அடுத்தடுத்த படங்களும் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. அடுத்து கமல் நடிக்க போவது விக்ரம் 3 ஆ அல்லது தேவர்மகன் 2 ஆ அல்லது வேறு ஏதாவது படமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். மகேஷ் நாராயணன் இயக்க போவதாக கமலே கூறி விட்டதால் தேவர் மகன் 2 வாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இப்படி ஒரு விஷயம் இருக்கா விக்ரமில்
விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் ரோல் பற்றியும், டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பற்றியும் தான் அதிகமானவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கமல் செய்த முக்கியமான தற்போது தான் வெளியே வந்துள்ளது. விக்ரம் படத்தில் கமல் வசூல் சாதனை மட்டுமல்ல, மற்றொரு தனி முத்திரையும் பதித்துள்ளார்.

கமலை விட்டால் ஆளே இல்லை
தமிழ் சினிமாவில் லேண்ட்மார்க் உருவாக்குவதற்கு கமலை விட்டால் ஆளே இல்லை எனலாம். அப்படி அவரின் ஒவ்வொரு படத்திலும் ஒரு லேண்ட்மார்க்கை உருவாக்குவதை தனது ஸ்பெஷாலிட்டியாகவே வைத்துள்ளார் கமல். புன்னகை மன்னன், குணா படங்களில் துவங்கி தற்போது நடித்த விக்ரம் படம் வரை அதை தொடர்ந்து செய்து வருகிறார்.

இதுவரை இது தெரியாம போச்சே
புன்னகை மன்னன் படத்தில் கமலும், ரேகாவும் ஒரு பாறை மீது ஏறி நின்று, குதித்து தற்கொலை செய்து கொள்வதை போல் ஒரு சீன் அமைக்கப்பட்டிருக்கும். இந்த சீன் மட்டுமல்ல இந்த சீனில் இடம்பெற்ற இடமும் தற்போது பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. ஒக்கேனக்கலில் உள்ள இந்த இடம் தற்போதும் பிரபலம்.

அட ஆமாங்க
இதே போல் குணா படத்தில் காதலி அபிராமியை ஒரு குகையில் கடத்திக் கொண்டு போய் வைத்திருப்பார். இந்த சீன் எடுக்கப்பட்ட இடம் தற்போதும் கொடைக்கானலில் குணா குகை என்ற பெயரில் பிரபலமான, முக்கியமான டூரிஸ்ட் இடமாக இருந்து வருகிறது. இது போல கமலின் பல படங்களில் வரும் இடங்கள் முக்கிய லேண்ட் மார்க்காகவே மாறி உள்ளது.

விக்ரமிலும் லேண்ட் மார்க்கா
அந்த வரிசையில் தற்போது விக்ரம் படத்திலும் ஒரு லேண்ட் மார்க்கை கமல் உருவாக்கி உள்ளார். விக்ரம் படத்தில் தனது டீமில் உள்ள நரேன் காப்பாற்றுவதற்காக சுரங்கம் பாதை ஒன்றிற்குள் துப்பாக்கியால் சுட்டபடி செல்வார் கமல். பிறகு ஒரு பாதை வழியாக தப்பித்து வருவார்கள். இந்த சீன் எடுக்கப்பட்ட இடம் வேறு எதுவும் இல்லை சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள பிரபலமான வெற்றி தியேட்டரில் தான்.

சென்னையில் இப்படி ஒரு இடமா
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த இடம் ரசிகர்களின் ஹாட்ஸ்பாட்டாக மாறி உள்ளது. இந்த தியேட்டரில் சுரங்க பாதை கதவு வழியாக விக்ரம் படத்தில் கமலின் டீமில் தப்பிச் சென்றதை வெற்றி தியேட்டர் உரிமையாளர்கள் படத்தின் போஸ்டரிலேயே குறிப்பிட்டுள்ளனர். இதனால் இந்த தியேட்டரில் விக்ரம் படம் பார்க்க வருபவர்கள் வரிசையில் நின்று இந்த இடத்தில் செல்ஃபி எடுத்துச் செல்கிறார்கள். குணா குகை போல் இதுவும் முக்கிய லேண்ட் மார்க்காக மாறி விடும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











