ட்விட்டர் டிரெண்டிங்கில் கமலஹாசன்... கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை : சினிமா, பிக்பாஸ், அரசியல் என படுபிஸியாக இருந்து வருகிறார் நடிகர் கமலஹாசன். இவர் தற்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

விக்ரம் படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் காரைக்குடியிலும், இரண்டாம் கட்ட ஷுட்டிங் புதுச்சேரியிலும் நடைபெற்றது. மூன்றாம் கட்ட ஷுட்டிங்கை சென்னையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் மியூசியத்தில் நடத்த சமீபத்தில் சென்னை போலீசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை காரணம் காட்டி, அனுமதி வழங்க சென்னை போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.

2022 ஏப்ரல் ரிலீஸ்

2022 ஏப்ரல் ரிலீஸ்

இதனால் விக்ரம் படத்தின் மூன்றாம் கட்ட ஷுட்டிங்கை எங்கு நடத்துவது என படக்குழுவினர் வேறு லொகேஷன் தேடி வருகிறார்கள். விக்ரம் படத்தை விரைவில் முடித்து 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் ரிலீஸ் என்பதை படக்குழு கிட்டதட்ட உறுதி செய்து, அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

இன்று ஃபஸ்ட் கிளான்ஸ்

இன்று ஃபஸ்ட் கிளான்ஸ்

சமீபத்தில் ஷுட்டிங் ஸ்பாட்டில் கமலின் பிறந்தநாளை கொண்டாடிய விக்ரம் படக்குழுவினர், கமலின் பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கமலின் பிறந்தநாள் ஸ்பெஷலாக விக்ரம் படத்தின் ஃபஸ்ட் கிளான்ஸ் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

67 வது பிறந்தநாள்

67 வது பிறந்தநாள்

இதனை முன்னிட்டு விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பின்னணியில் கொளுந்து விட்டு எரியும் தீ, கையில் பெரிய துப்பாக்கியுடன் கமல், அவருக்கு அருகில் வாட்ச் இருப்பது போன்று இந்த போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. கமலின் 67 வது பிறந்த நாளை குறிக்கும் வகையில், இந்த வாட்ச்சில் 67 நொடிகளில் முட்கள் நகர்வதை போல் காட்டப்பட்டுள்ளது.

Recommended Video

AJ Professor என் தம்பிதான் Full support | Nadia Chang | Bigg boss 5 | Filmibeat Tamil
டிரெண்டிங்கில் கமலஹாசன்

டிரெண்டிங்கில் கமலஹாசன்

இந்நிலையில் ட்விட்டரில் Kamalahassan என்ற ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆகி உள்ளது. இதில் ரசிகர்கள் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதுடன், பிக்பாஸில் கமல் தோன்றும் செம ஸ்டைலான ஃபோட்டோக்களை பதிவிட்டு பாராட்டி வருகின்றனர். விக்ரம் படத்தின் ஃபஸ்ட் கிளான்சை பார்க்க ஆர்வமாக காத்திருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.

குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

சமீபத்திலும் பிக்பாஸில் கமலின் வித்தியாசமான லுக்கை பாராட்டும் வகையில் கமலஹாசன் என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டது. தற்போது மீண்டும் கமல் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத், டைரக்டர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட விக்ரம் படக்குழுவினர் நேற்று முதலே கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X