»   »  தில்லுமுல்லு கார்த்தி!

தில்லுமுல்லு கார்த்தி!

Subscribe to Oneindia Tamil

ரீமேக் என்ற பெயரில் ரஜினி படங்களை லவட்டும் லேட்டஸ்ட் டிரெண்ட்டில் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளது தில்லுமுல்லு.

தமிழ் சினிமாக்காரர்கள், தங்கள் மண்டைக்குள் இருக்கும் மூளைக்கு கோடை விடுமுறை கொடுத்து கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள் போல. சுயமாக சிந்திப்பதை தூரப்போட்டு விட்டு, பழைய படங்களை ரீமேக் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இப்படி ரீமேக் ஆகி வந்த முதல் படம் நான் அவனில்லை. இப்போது பில்லா, ஜானி, முள்ளும் மலரும், மன்மத லீலை என பல சூப்பர் ஹிட் படங்கள் ரீமேக் ஆக காத்திருக்கின்றன அல்லது ஆகி வருகின்றன. பெரும்பாலும் ரஜினி படங்களையே ரீமேக் ஆக்கி வருகின்றனர் கோலிவுட் கற்பனாவாதிகள்.

ரஜினியைக் குறி வைத்து கொத்தி எடுப்பதற்கு முக்கியக் காரணம், சூப்பர் கதை, நிச்சய வெற்றி, இன்ஸ்டன்ட் மார்க்கெட் ஹைக் ஆகியவைதான் முக்கிய காரணம். இதனால்தான் ரஜினி படத்தை ரீமேக் செய்யத் துடிக்கிறார்கள் அல்லது குறைந்தபட்சம் அவரது படத்தின் தலைப்பையாவது தங்களது படங்களுக்கு வைக்க தவிக்கின்றனர்.

மிஸ்டர் பாரத் படத்தை லேசு பாசாக கதையை மாற்றி திருவிளையாடல் ஆரம்பம் என்ற பெயரில் எடுத்து ஹிட் ஆக்கினார்கள். இப்போது தனுஷின் அடுத்த படத்துக்கு பொல்லாதவன் என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படியாக ரஜினி படங்களும், அவரது பட டைட்டில்களும் சுய சிந்தனை வற்றிப் போன நமது இயக்குநர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் படாதபாடு பட்டு வரும் நிலையில் புதிதாக தில்லு முல்லு படம் இந்த ரீமேக் வரிசையில் சேர்ந்துள்ளது.

லிங்குச்சாமி இயக்க, பருத்தி வீரன் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்க தில்லுமுல்லு உருவாகிறது. ஆனால் ரஜினியின் தில்லுமுல்லுவுக்கும், இப்படத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று இயக்குநர் லிங்குச்சாமி கூறுகிறார்.

முதல் முறையாக கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படம் குறித்து லிங்குச்சாமியிடம் கேட்டபோது, கார்த்தியை வைத்துப் படம் பண்ணப் போகிறேன். படத்துக்காக பல டைட்டில்களைப் பரிசீலித்தோம். அதில், ரஜினி சாரின் தில்லுமுல்லு என்ற தலைப்பும் ஒன்று.

இறுதியில் அந்தத் தலைப்பையே இறுதி செய்து விட்டேன். எனது கதைக்கு இந்த டைட்டில் மிகவும் பொருத்தமானது. ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி ஆகியவை கலந்த கலவை இப்படத்தின் கதை. கார்த்திக்கு இந்தப் படம் திருப்புமுனையாக இருக்கும் என்றார் லிங்குச்சாமி.

ரஜினி படங்களை சுட பெரிய தள்ளுமுள்ளே நடக்கும் போலிருக்கே!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil