இப்பவும் பருத்திவீரன் பற்றி பேசுறாங்க...நெகிழ்ந்து போன கார்த்தி
சென்னை : டைரக்டர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானவர் கார்த்தி. இந்த படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. முதல் படத்திலேயே தனது யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார் கார்த்தி.
அதன் பிறகு தமன்னா, காஜல் அகர்வால், அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் கார்த்தி. சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கேரக்டரில் நடித்து முடித்துள்ளார்.

விருமனுக்காக தயாராகும் கார்த்தி
இதைத் தொடர்ந்து இரட்டை வேடத்தில் நடிக்கும் சர்தார் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் விருமன் படத்தில் கிராமத்து கெட்அப்பில் நடிக்க தயாராகி வருகிறார் கார்த்தி. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் அவர் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

மதுரையில் விருமன் ஷுட்டிங்
விருமன் படம் விவசாயத்தை மையமாக் கொண்ட கதை என கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட உள்ளது. சமீபத்தில் எளிமையான பூஜையுடன் விருமன் படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படம் பற்றி புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் கார்த்தி.

பருத்திவீரன் பற்றி பேசுறாங்க
தற்போது விருமன் படத்தின் ஷுட்டிங்கிற்காக மதுரை சென்றுள்ள கார்த்தி, தனது இன்ஸ்டாகிராமில், 14 வருடங்கள் கழித்து விருமன் படத்திற்காக மீண்டும் மதுரைக்கு வந்துள்ளேன். இப்போதும் மக்கள் என்னிடம் பருத்திவீரன் படம் பற்றி பேசுவதை கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இங்குள்ள மக்களின் அன்பும், கனிவும் இன்னமும் மாறவில்லை. ஆசிர்வதிக்கப்பட்டதாகவும், நன்றியுடனும் உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

வைரலாகும் ஃபோட்டோ
14 வருடங்களுக்கு பிறகு இப்போது தான் கார்த்தி மதுரை வருகிறாரா என பலர் ஆச்சரியத்துடன் கேட்டுள்ளனர். பசுமையான இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட தனது ஃபோட்டோவுடன் கார்த்தியின் இந்த பதிவு செம வைரலாகி வருகிறது. இதனை கார்த்தி பதிவிட்ட இரண்டு மணி நேரத்திலேயே இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications