»   »  10 வருஷமாச்சு, லவ் யூ ஆல், நன்றி: இப்படிக்கு 'பருத்திவீரன்' கார்த்தி

10 வருஷமாச்சு, லவ் யூ ஆல், நன்றி: இப்படிக்கு 'பருத்திவீரன்' கார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்தி நடிக்க வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்று படித்த கார்த்தி நாடு திரும்பிய பிறகு இயக்குனர் ஆக ஆசைப்பட்டு உதவி இயக்குனராக வேலை பார்த்தார். இந்நிலையில் தான் அவர் அமீரின் பருத்திவீரன் படம் மூலம் ஹீரோ ஆனார்.

பருத்திவீரன் போஸ்டரை பார்த்தவர்கள் யாருய்யா இந்த ஆளு இவர் எல்லாம் ஹீரோவா என்றார்கள். ஆனால் படம் ரிலீஸான பிறகு கார்த்தியை கொண்டாடினார்கள் ரசிகர்கள். கார்த்தி தன்னை ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

பருத்திவீரன்

பருத்திவீரன்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பருத்திவீரன் வெளியானது. அதில் இருந்து நீங்கள் அனைவரும் என் மீது பாசம் வைத்துள்ளீர்கள்.

வாழ்க்கை

வாழ்க்கை

ஏற்றம், இறக்கம் ஏற்பட்டாலும் நீங்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து என் வாழ்க்கையை அழகாக ஆக்கியுள்ளீர்கள். உங்களின் அன்புக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். தொடர்ந்து நான் கடினமாக உழைப்பேன். நன்றி.

அண்ணா

கடவுள், குடும்பம், அண்ணா, என் இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், சக கலைஞர்கள், மீடியா நண்பர்கள், பாண்டியன் மாஸ்டர், தியேட்டர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் என் அருமை ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார் கார்த்தி.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

திரைத்துறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கார்த்திக்கு திரையுலகினர் பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

English summary
Karthi who has completed ten years in film industry as an actor has thanked fans and everyone for supporting him all these years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil