»   »  மணிரத்னத்திற்காக ஆசை, ஆசையாய் வளர்த்ததை இழக்கும் கார்த்தி

மணிரத்னத்திற்காக ஆசை, ஆசையாய் வளர்த்ததை இழக்கும் கார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்திற்காக கார்த்தி மீசை இல்லாமல் நடிக்கிறாராம்.

கார்த்தி மணிரத்னத்தின் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். கார்த்தி விமானியாக நடிப்பதால் அதற்கேற்ப தனது உடலை கும்மென்று ஆக்கியுள்ளாராம்.

Karthi to loose moustache for Mani

இந்த படத்தில் கார்த்தி தாடியில்லாமல் வருகிறார் என்று முதலில் கூறப்பட்டது. முதலில் தாடியை எடுக்கச் சொன்ன மணி தற்போது மீசையையும் எடுக்குமாறு கூறிவிட்டாராம்.

கார்த்தி என்றாலே லேசான தாடி, மீசை தான் அனைவரின் நினைவுக்கு வரும். இந்நிலையில் கார்த்தியை தாடி, மீசை இல்லாமல் பார்க்க வைக்கிறார் மணிரத்னம். கார்த்தி முதல் முறையாக மீசை இல்லாமல் நடிக்கிறார்.

தன்னுடைய குரு பாலச்சந்தருக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட தில்லுமுல்லு படத்திற்காக மீசையை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karthi is reportedly sporting a clean shaven look for Maniratnam's 'Kaatru Veliyidai'. He is loosing his moustache for

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil