»   »  நாகார்ஜூனாவுடன் இணையும் கார்த்தி... ‘கிளாப்’ அடித்து தொடங்கி வைத்த சிவகுமார்!

நாகார்ஜூனாவுடன் இணையும் கார்த்தி... ‘கிளாப்’ அடித்து தொடங்கி வைத்த சிவகுமார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் ராகார்ஜூனாவுடன், கார்த்தி இணைந்து நடிக்கும் புதிய படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்துள்ளார் நடிகர் சிவகுமார்.

தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, தமிழ் நடிகர் கார்த்தி இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது.

வம்சி இயக்கும் இப்படத்தை பி.வி.பி. சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

கிளாப் அடித்த அமலா...

கிளாப் அடித்த அமலா...

இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது. படப்பிடிப்பை நாகர்ஜூனாவின் மனைவியும், நடிகையுமான அமலா கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

தமிழுக்கு சிவகுமார்...

தமிழுக்கு சிவகுமார்...

அதன் தொடர்ச்சியாக, இப்படத்தின் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. பூஜையுடன் தொடங்கியது விழா. படப்பிடிப்பை கார்த்தியின் அப்பாவும், மூத்த நடிகருமான சிவகுமார் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்,

உறவைச் சொல்லும் படம்...

உறவைச் சொல்லும் படம்...

இந்த துவக்க விழாவில் கார்த்தி பேசியதாவது, ‘நான் சிறு வயதிலிருந்தே ரசித்து பார்த்த நாகர்ஜூனாவிடம் இணைந்து நடிப்பது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் ஒரு உறவைப் பற்றிய சொல்லும் படமாக இருக்கும்.

சம்மதத்திற்கான காரணம்...

சம்மதத்திற்கான காரணம்...

இத்தனை நாட்களாக ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்களுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தேன். இந்த படத்தின் கதை எனக்கு பிடித்துப் போனதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். ஸ்ருதிஹாசன், விவேக் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்' என்றார்.

English summary
We had reported earlier that Karthi and Nagarjuna are joining hands to act in an upcoming Tamil-Telugu bilingual movie directed by Vamsi Paidipally. The pooja of the movie happened today, 15th March 2015 with actor Sivakumar inaugurating the proceedings with the first clap

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil