»   »  நடிப்பில் சூர்யாவைப் பின்பற்றும் கார்த்தி

நடிப்பில் சூர்யாவைப் பின்பற்றும் கார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னத்தின் அடுத்த படத்தில் கார்த்தி விமான பைலட்டாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கார்த்தி, நாகர்ஜுனா மற்றும் தமன்னாவுடன் இணைந்து நடித்த தோழா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வருகின்ற 25 ம் தேதி வெளியாகிறது.

Karthi's New Avatar for his next

தோழாவைத் தொடர்ந்து காஷ்மோரா படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். மேலும் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நடிக்கவும் கார்த்தி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ரஜினி-மம்முட்டி, பிரபு-கார்த்திக், அர்ஜுன்-அரவிந்த் சாமி வரிசையில் கார்த்தி-துல்கர் சல்மானை வைத்து படமெடுக்க மணிரத்னம் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் துல்கரின் தொடர் கால்ஷீட் சொதப்பல்களால், கார்த்தியை வைத்து சிங்கிள் ஹீரோ சப்ஜெக்ட்டாக இப்படத்தை அவர் எடுக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கான முதல்கட்டப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.இதில் கார்த்தி வெளிநாடு வாழ் இந்தியராகவும், சாய் பல்லவி மருத்துவராகவும் நடிக்கவிருக்கின்றனர்.

காஷ்மோரா படத்திற்காக கார்த்தி மொட்டை அடித்திருப்பதால் ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்க மணிரத்னம் முடிவு செய்திருக்கிறாராம்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ரவிவர்மன் மேற்கொள்ளவிருக்கிறார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24 படத்தில் சூர்யா பைலட்டாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Karthi to Play a Pilot for his Next Movie, Directed by Mani Ratnam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil