படத்திற்கு படம் கெட்அப் சேன்ஜ்... பட்டையை கிளப்பும் கார்த்தி
சென்னை : கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதில் வந்திய தேவன் ரோலில் தான் கார்த்தி நடிக்கிறார். இதற்காக நீண்ட தலை முடியுடன் புது விதமான கெட்அப்பில் கார்த்தி இருந்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் படத்துடன் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இதில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடிக்கிறார். இதில் ஒன்று வயதான கேரக்டர். இதிலும் வித்தியாசமான கெட்அப்பில் தோன்ற வேண்டும் என்பதற்காக நீண்ட தலைமுடி, நீண்ட தாடியுடன் இருக்கிறார்.

தோல் மாற்றத்திற்கு பயிற்சி
சர்தார் படத்தில் வயதான தோற்றத்தை தத்ரூபமாக காட்ட வேண்டும் என்பதற்காக தோல் சுருங்கியது போல் காட்ட சிறப்பு பயிற்சியையும் கார்த்தி எடுத்துக் கொண்டாராம். ஸ்பெஷல் மேக்அப்பும் அவருக்கு போடப்பட்டுள்ளது. வயதான கெட்அப்பில் இருக்கும் கார்த்தியின் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டு, வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் படத்திலும் தோல் மாற்றத்திற்காக சிறப்பு பயிற்சி எடுத்தாராம் கார்த்தி.

அடுத்த படம் விருமன்
இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. டைரக்டர் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் கார்த்தி நடிப்பதாக கூறப்பட்டது. சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் அவர் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

மீண்டும் புது லுக்
ஏற்கனவே டைரக்டர் முத்தையா இயக்கிய கொம்பன் படத்தில் பெரிய முறுக்கு மீசையுடன், கிராமத்து கெட்டப்பில் கார்த்தி நடித்தார். அதைத் தொடர்ந்து நடித்த கடைக்குட்டி சிங்கம் படமும் கிராமத்து கதை என்பதால், கேரக்டரில் வித்தியாசம் காட்ட மீசை, ஹேர்ஸ்டைல் என அனைத்தையும் மாற்றி, புதுவிதமான தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் விருமன் படத்திற்காக புது லுக்கிற்கு மாற போகிறாராம் கார்த்தி.

சர்தாருக்கு பின் விருமன்
சமீபத்தில் பூஜை போடப்பட்ட விருமன் படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் இந்த வார இறுதியில் துவங்க உள்ளதாம். அதற்கு முன் சர்தார் படத்தின் முக்கிய காட்சிகளை நடித்து முடித்து விட கார்த்தி முடிவு செய்துள்ளாராம். சர்தார் படத்தின் பெரும்பாலான முக்கிய காட்சிகளை முடித்து விட்டு, விருமன் படத்திற்கான புதிய லுக்கிற்கு மாற போகிறாராம் கார்த்தி.
Recommended Video

எங்கே ஷுட்டிங்
ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் விருமன் முழுக்க முழுக்க கிராமத்து கதையாக உருவாக்கப்பட உள்ளதாம். ஆனால் இந்த படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் எந்த லொகேஷனில், எந்த தேதியில் துவங்குகிறது என்பது பற்றிய தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications











