»   »  பருத்திவீரன் கார்த்தி பிறந்த நாள் இன்று

பருத்திவீரன் கார்த்தி பிறந்த நாள் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பருத்திவீரனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று கொம்பனாக அனைவராலும் அறியப்படும் கார்த்தியின் 38 வது பிறந்த தினம் இன்று.1977 ம் வருடம் பிறந்த கார்த்தி 37 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து இன்று தனது 38 வது வயதில் அடியெடுத்து
வைத்திருக்கிறார்.

நடிகர் சிவகுமார்- லட்சுமி தம்பதிகளின் இளைய மகன், தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ நடிகர் சூர்யாவின் சகோதரன் என சினிமா பின்னணிக் குடும்பத்தில் இருந்து வந்த கார்த்தி படித்தது மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சினிமாவில் இயக்குனராக ஆசைப்பட்டு இயக்குனர் மணிரத்தினத்தின் படங்களில் பணியாற்றியவர்(ஆயுத எழுத்து-தமிழ்,ஹிந்தி).

நடிகர் சிவகுமார் இவரை ஹீரோவாக பார்க்க ஆசைப்பட விளைவு பருத்தி வீரன் படத்தில் நடிகராக மாறிவிட்டார்.அச்சு அசல் கிராமத்து இளைஞனாக இவர் மாறியதைக் கண்டு ஆச்சரியப் படாதவர்கள் குறைவே.

பருத்தி வீரனாக

பருத்தி வீரனாக

பருத்தி வீரன் படத்தில் வில்லேஜ் ரவுடியாக அதகளம் பண்ணிய இவரது முதல் படம் மாபெரும் வரவேற்பை மக்களிடம் பெற்றது.முதல் படத்தில் கிடைத்த வசூல்,புகழ் இந்த இரண்டையும் இதுவரை இவர் நடித்த வேறு எந்தப் படமும் பெறவில்லை.

ஹாட்ரிக் வெற்றி

ஹாட்ரிக் வெற்றி

இரண்டாவது படமான ஆயிரத்தில் ஒருவன் படம் சுமாராக ஓடியது. அதுவரை முந்தைய இரண்டு படங்களில் அழுக்கு பையனாக வந்த கார்த்தியை பையா படம் அழகான பையனாக மாற்றியது.பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என்று தொடர்ந்து ஹாட்ரிக்
வெற்றியை பதிவு செய்தார்.

சறுக்கிய சகுனி

சறுக்கிய சகுனி

2012- 2013 இந்த இரண்டு வருடங்களுமே கார்த்தி நடித்து வெளிவந்த எந்தப் படங்களும் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. சகுனி படத்தில் ஆரம்பித்து அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி போன்ற படங்களால் கார்த்தியின் மார்க்கெட் சரிந்தது.

கைகொடுத்த காளி

கைகொடுத்த காளி

ரஞ்சித் இயக்கத்தில் நடித்த மெட்ராஸ் படம் மீண்டும் கார்த்தியை வெற்றினாயகனாக மாற்றியது. அலட்டிக் கொள்ளாமல் வடசென்னைவாசியாக மாரி காளி என்ற கேரக்டேரில் நடித்திருப்பார். விமர்சகர்களாலும், பத்திரிகைகளாலும் பெரிதும் பாராட்டப் பட்ட இந்தப் படம்
வசூலிலும் சோடை போகவில்லை.

கொம்பன் – பருத்திவீரன் பார்ட் 2

கொம்பன் – பருத்திவீரன் பார்ட் 2

சுமார் ஏழு வருடங்கள் கழித்து பருத்திவீரனுக்குப் பிறகு மீண்டும் கிராமத்து இளைஞனாக கொம்பன் படத்தில் நடித்திருந்தார். இவர் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக வசூலைக் குவித்திருக்கிறது கொம்பன்.

9 வருடங்களில் 11படங்கள்

9 வருடங்களில் 11படங்கள்

நடிக்க வந்த 9 வருடங்களில் மொத்தமே 11 படங்கள் தான் நடித்திருக்கிறார். நிறைய படங்களில் நடிப்பதை விட பிடித்த படங்களில் நடிப்பதை கொள்கையாக வைத்திருக்கிறார்.

மேலும் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள் கார்த்தி...

English summary
Tamil hero Karthi, son of actor Sivakumar and brother of superstar Suriya, celebrates his 38th birthday Today.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil