TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
பாட்ஷாவை ரீமேக் செஞ்சா நடிக்க நான் ரெடி! - கார்த்தி
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிக்க நான் தயாராக உள்ளேன், என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
வேலூர் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 'ரிவேரா' கலை விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், இணை வேந்தர் எஸ்.நாராயணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மறக்க முடியாத வேலூர் ரசிகர்கள்
சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "வேலூர் ரசிகர்களை என்னால் மறக்க முடியாது. ‘பருத்திவீரன்' படம் வெளியான போது மதுரையை விட வேலூரில் ரசிகர்கள் எனக்கு அளித்த வரவேற்பு அதிகமாக இருந்தது. வேலூர் என்றாலே வெயில் அதிகம் என்பார்கள். ஆனால் வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் பசுமை மரங்களால் வெயில் தெரியவில்லை.
கல்வி முக்கியம்
நான் என்ஜினீயரிங் படித்தேன். படிப்பு முடித்தவுடன் அந்த துறையில் வேலை செய்தும் எனக்கு திருப்தி வரவில்லை. அதனால் சினிமாதான் நமக்கு உகந்த துறை என முடிவு செய்தேன்.
இயக்குநராக வேண்டும் என்று மணிரத்தினத்திடம் உதவியாளராகச் சேர்ந்தேன். பின்பு நடிக்கவும் வாய்ப்பு வந்தது. இன்று நடிகனாக உங்கள் முன்பு நிற்கிறேன். கல்வி மிகவும் முக்கியம். கடினமாக உழைக்கும் உங்கள் வேந்தர் விஸ்வநாதனை போல நீங்களும் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். அகரம் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
மாணவ மாணவிகள் கேள்வி
பின்னர் மாணவ-மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். எந்தப் படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசை என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.
ரஜினியின் பாட்ஷா படம்
அதற்கு பதிலளித்த கார்த்தி, 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பாட்ஷா படம். அந்தப் படத்தை ரீமேக் செய்து நடிப்பது கஷ்டம் என்பது எனக்கும் தெரியும். இருந்தாலும் ‘பாட்ஷா' படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிக்க ஆசையாக இருக்கிறேன்', என்றார்.
காட்டுக்குப் போயிடுவேன்
ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, "ஓய்வு நேரத்தில் காடுகளுக்கு சென்று அங்குள்ள விலங்குகளை பார்த்து ரசிப்பேன். அது ஒரு தனி அனுபவம்,' என்றார்.
மறக்க முடியாத பரிசு
மறக்க முடியாத பரிசு எது, என்ற கேள்விக்கு, "நான் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற போது என்னுடைய மாமா வாங்கி தந்த மோட்டார் சைக்கிள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசாகும். மேலும் என்னுடைய ரசிகர் ஒருவர் அவருடைய முதல் சம்பளத்தில் சட்டை வாங்கி எனக்கு அனுப்பி இருந்தார். அந்த சட்டையை ஒரு பேட்டிக்கு போட்டு சென்றேன். அதுவும் மறக்க முடியாத பரிசுதான்,' என்றார்.
அமீருக்கு நன்றி
‘பருத்திவீரன்' படம் வெளியான போது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். இதற்கு இயக்குநர் அமீருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.
பிடித்த நடிகை
எனக்குப் பிடித்த நடிகை அமலா (முன்னாள் நடிகை). எனக்கு ஆண், பெண் ரசிகர்கள் சம அளவில் உள்ளனர். அழகான பெண் என்னை பார்த்து அண்ணா என்று கூப்பிட்டால் வருத்தமாகத்தான் இருக்கும், " என்றார்.
விழா முடிவில், ‘ராஜா, ராஜா ராக்கெட் ராஜா...' என்ற பாடலுக்கு மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து நடிகர் கார்த்தி நடனமாடி மகிழ்வித்தார்.