For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திரைத் துளி

  By Staff
  |
  கார்த்திக்கிடம் சில கெட்ட பழக்கங்கள் உள்ளன. அவற்றிலிருந்து மீண்டு வந்து விட்டால் அவரது இடத்தைஅவரால் மட்டுமே முறியடிக்க முடியும்.

  இது கேப்டன் விஜயகாந்த் கொடுத்த பாராட்டு. இடம், மனதில் ஆடியோ கேசட் விழா. எங்கள் அண்ணா படத்தில்நடிக்க வராமல் டேக்கா கொடுத்ததால், கேப்டனால் கடுக்காய் கொடுக்கப்பட்ட கார்த்திக், அவரது வாயாலேயேஇப்படிப் பாராட்டப்பட்டது கார்த்திக்கை நெகிழ வைத்துள்ளது.

  இயல்பான நடிப்புக்குப் பெயர் பெற்றவர். எந்த கேரக்டரைக் கொடுத்தாலும் அதை திறம்படக் கையாளும் நடிகர்.வசன உச்சரிப்பில் சற்று சொதப்பினாலும், முக பாவனையிலும், பாடி லாங்க்வேஜ்ஜிலும் கலக்குபவர். மெளனராகம்,அக்னி நட்சத்திரம், கோகுலத்தில் சீதை படங்களைப் பார்ப்பவர்கள் இவரது நடிப்பில் மனதைப் பறி கொடுக்காமல்இருக்க முடியாது.

  அத்தகை திறமையுடையவர் கால்ஷீட் சொதப்பல், படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவது போன்ற காரணங்களால்பீல்ட் அவுட்டானார். நடிகர் சங்கத்துக்கு தினமும் சென்று பொழுது போக்கிக் கொண்டிருந்தவருக்கு மனதில்,காஷ்மீர் பட வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது ஆள் கொஞ்சம் பிஸி.

  அண்மையில் (படு கிளாமராக) கெளசல்யாவும், கார்த்திக்கும் நடித்த மனதில் படத்தின் ஆடியோ கேசட் விழாசென்னையில் நடந்தது. இதில் விஜயகாந்த், சரத்குமார், பிரபு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

  நிகழ்ச்சியில் பேசிய அனைவருமே சொல்லி வைத்தாற் போல கார்த்திக்கை புகழ்ந்து தள்ளினர். அதாவது, அவரதுநடிப்பை பாராட்டத் தவறவில்லை. அதேபோல, கார்த்திக்கிற்கு நிறைய அட்வைஸ்களையும் அள்ளி வழங்கினர்.

  விஜயகாந்த் பேசும்போது, சில வேண்டாத பழக்கங்களால் கார்த்திக் என்ற நல்ல நடிகரின் படங்களை அதிகம்காண முடியாத நிலை ரசிகர்களுக்கு ஏற்பட்டு விட்டது. அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும், அப்படி புரிந்துகொண்டு நடந்தால் அவரது இடத்தை அவரால் மட்டுமே முறியடிக்க முடியும், நல்ல படங்களையும் கொடுக்கமுடியும் என்றார்.

  இதே கருத்தையே சரத்குமாரும் வெளிப்படுத்தினார். கார்த்திக்கிற்கு மிகவும் உரிமையுடன் பல அட்வைஸ்களைகூறினார் சரத்குமார்.

  நிகழ்ச்சியின் இறுதியாக கார்த்திக் பேசும்போது நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அலைகள் ஓய்வதில்லை படத்தில்நான் அறிமுகமானபோது அனைத்துத் தரப்பினரும் என்னை ஆதரித்தார்கள். அதை நான் சரியான முறையில் தக்கவைத்துக் கொள்ள தவறி விட்டேன்.

  எனது தொழிலில் இனிமேல் கவனமுடன் இருப்பேன். அனைவருக்கும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வேன்.எனது தந்தை உங்களிடத்தில் என்னை விட்டு விட்டுச் சென்று விட்டார், நீங்கள்தான் என்னைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று கார்த்திக் கூறியபோது விழா அரங்கமே அமைதியாக கவனித்துக் கொண்டது.

  கமான் கார்த்திக், இன்னும் உங்களுக்குக் காலம் உள்ளது, பூந்து கலக்குங்க!


  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X