»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Subscribe to Oneindia Tamil

படத்தின் கதையை மாற்றியதை எதிர்த்து ஷூட்டிங்கின்போது தூக்கப் போராட்டம் நடத்திய நடிகர் கார்த்திக் இனிபடங்களிலோ, டிவிக்களிலோ நடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேயார் இயக்கத்தில் கார்த்திக் நடித்து வரும் படம் "என்ன பெயர் வைக்கலாம்?" இந்தப் படத்தின் படப்பிடிப்பைபொள்ளாச்சியில் துவக்க உத்தேசிக்கப்பட்டது.

படப்பிடிப்பின் முதல் நாளான கடந்த ஆண்டு ஆகஸ்டு 6ம் தேதி ஷூட்டிங் ஸ்பாட்டில் கேயார் உள்பட அந்தப்படத்தின் யூனிட் முழுவதுமே காட்சிக்குத் தேவையான ஏற்பாடுகளுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால்அங்கிருந்த ஒரு ரூமில் கார்த்திக் மட்டும் "தேமே"யென்று தூங்கிக் கொண்டிருந்தார்.

அவருக்காகக் காத்திருந்து காத்திருந்து பார்த்த கேயார், கார்த்திக் கடைசி வரை வராததால் முதல் நாள் ஷூட்டிங்கை"பேக்-அப்" செய்து விட்டார்.

மறுநாளாவது ஷூட்டிங்கை ஆரம்பிக்கலாம் என்று மீண்டும் அனைத்து ஏற்பாடுகளுடனும் படப்பிடிப்பு யூனிட்தயாராக, அன்றைக்கும் கார்த்திக் நன்றாகத் தூங்கி வழிந்தார். அவருடைய அறைப் பக்கத்தில் கூட யாரும்செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. விளைவு - மறுபடியும் "பேக்-அப்".

போனது போகட்டும். இன்றாவது ஷூட்டிங்கை ஆரம்பித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் கேயார் மூன்றாவதுநாளும் படப்பிடிப்பை ஆரம்பிக்கத் தயாரானார்.

ஆனால் அன்றைக்கும் தனக்குப் பயங்கரத் தூக்கம் வருவதாகக் கூறி, ஷூட்டிங்கிற்கு வர முடியாது என்றுஉதவியாளர் மூலம் கார்த்திக் சொல்லி அனுப்பி விட்டார்.

இதையடுத்து கடுப்பின் உச்சிக்கே சென்று விட்டார் கேயார். படத்தின் ஒட்டு மொத்த ஷூட்டிங்கையுமே கேன்சல்செய்து விட்டு, பொள்ளாச்சியிலிருந்து கிளம்பிய அவர், "இனி கார்த்திக்கை வைத்துப் படமே எடுக்கப்போவதில்லை" என்று அறிவித்து விட்டு சென்னை கிளம்பி விட்டார்.

தொடர்ந்து மூன்று நாட்களிலும் ஒரு சிறு பிட் காட்சி கூட எடுக்கப்படாத நிலையில், லட்சக் கணக்கில்செலவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

கார்த்திக் விரும்பாத கதை மாற்றம்:

"என்ன பெயர் வைக்கலாம்?"படத்தின் மூலக் கதை மலையாளப் படத்தினுடையது. அதே கதையை எடுப்பதாகக்கூறித்தான் கார்த்திக்கை புக் செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் படப்பிடிப்பின்போது கதை மாற்றப்பட்டதைகார்த்திக் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்துதான் அவருக்குத் "தூக்கம்" வர ஆரம்பித்தது.

இதையடுத்து இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், ஃபெப்ஸி தலைவரும் இயக்குநருமான கே.பாலசந்தர் ஆகியோரிடம் கேயார் புகார் கூறினார். இப்பிரச்சனையைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறியபாலசந்தர், இந்தப் பேச்சுக்கான நாளையும் குறித்தார்.

பேச்சுவார்த்தை நடக்கும் நாளன்று பாலசந்தரும், கேயாரும் கார்த்திக்கை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்துக்காத்திருந்தனர். ஆனால் அப்போதும் கார்த்திக் வழக்கம்போல் "தூங்கி" விட்டாரோ என்னவோ, அந்தப்பேச்சுவார்த்தைக்கே வரவில்லை.

இதனால் கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த பாலசந்தர், இனி நீங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும்எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். இதையடுத்து 23 பிரிவினர் அங்கம் வகிக்கும் ஃபெப்ஸிகூட்டமைப்பிடம் கேயார் புகார் செய்தார்.

இதையடுத்து கார்த்திக் படங்களுக்கு இனிமேல் ஒத்துழைப்புத் தருவதில்லை என்று ஃபெப்சி அமைப்பும்தயாரிப்பாளர்கள் சங்கமும் முடிவு செய்து விட்டன. எந்த இந்திய மொழிப் படத்திலும், டிவி சீரியல்களிலும்,விளம்பரப் படங்களிலும் இனி நடிக்கக் கூடாது என்று இச்சங்கங்கள் அவருக்குத் தடை விதித்துள்ளன.

கார்த்திக்கை வைத்து புதிதாக படம் எடுக்கவோ, பூஜை போட்டு ஆரம்ப கட்ட நிலையில் இருக்கும் படங்களோஇனி எடுக்க முடியாது என்றும் அவை முடிவு செய்துள்ளன.

கார்த்திக்குக்கு விஜயகாந்த் ஆதரவு:

இதற்கிடையே விஜயகாந்த் தலைமையில் நடிகர் சங்க உறுப்பினர்கள் கூடிப் பேசினர். இதைத் தொடர்ந்துவிஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கார்த்திக்கிற்கும், சம்பந்தப்பட்ட டைரக்டருக்கும் இடையிலான பிரச்சினைதான் இது. அவர்கள் மட்டுமே பேசித்தீர்த்திருக்க வேண்டிய விஷயம். ஆனால் தேவையில்லாமல் சங்கங்களை எல்லாம் அப்படத்தின் தயாரிப்பாளர்இழுத்து விட்டுள்ளார்.

படத்தில் நடிக்க கார்த்திக் தயாராகவே உள்ளார். ஆனால் சொன்னபடி கதையை மாற்றாமல் எடுத்தால் நடிக்கத்தயார் என்று அவர் கூறியுள்ளார். அப்படி செய்தால் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கவும் அவர் தயாராகஇருக்கிறார்.

ஆனால் அப்படிச் செய்யாமல் கார்த்திக் படங்களுக்குத் தடை விதிப்போம் என்று சொல்வது நியாயமே இல்லை.நடிகர்களுக்குள் பிரச்சினை ஏற்பட வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே இந்த முடிவை அவர்கள்எடுத்துள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இதை நாங்கள் ஏற்கவே மாட்டோம். முழுமையாக எதிர்ப்போம் என்றார் விஜயகாந்த்.

டிவிகளுக்கு படங்கள் கொடுக்கக் கூடாது என்ற விஷயத்தில் கொஞ்ச காலமாக திரையுலகில் பிரச்சினை இருந்துவந்தது. கமலுக்கேக் கூட தடை விதிக்கப்பட்டது.

சமீபகாலமாக இத்தகைய பிரச்சினைகள் இல்லாமல் அமைதியாக இருந்து வந்த நிலையில், மீண்டும் ஒரு கார்த்திக்பிரச்சினை கிளம்பியுள்ளது. இது எதில் போய் முடியுமோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil