தீபாவளி ரேஸ்னு கனவு கண்டதெல்லாம் போச்சா.. கார்த்தியின் ’வா வாத்தியார்’ ரிலீஸ் அப்டேட் இதோ!
சென்னை: சூது கவ்வும் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் நலன் குமாரசாமியுடன் கார்த்தி இணைவதாக கடந்த ஆண்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஒருவழியாக தற்போது ரிலீஸ் அறிவிப்பை ஸ்டூடியோ க்ரீன் அறிவித்துள்ளது. ஆனால், கார்த்தி ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் 2 அல்லது வா வாத்தியார் என இரண்டு படங்களில் ஒரு படம் கண்டிப்பாக வெளியாகும் என ரசிகர்கள் ரொம்பவே கனவு கண்டனர். அவர்களின் கனவில் இடி விழுந்தது போல தற்போது ரிலீஸ் அறிவிப்பை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.

கைதி, சர்தார் படங்களை போல தீபாவளிக்கு கார்த்தி படம் வெளியானால் பாக்ஸ் ஆபீஸ் வேட்டை நடத்தும் என நினைத்த ரசிகர்களுக்கு லேசாக ஏமாற்றம் இருந்தாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகி விடும் என்கிற சந்தோஷமும் அதிகரித்து வருகிறது.
டிசம்பரில் வா வாத்தியார்: சூர்யாவின் கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வா வாத்தியார் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தாமதப்படுத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டிப்பாக வா வாத்தியார் படம் வெளியாகும் என்கிற அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். ஆனால், இதிலும் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதியாக குறிப்பிடாமல் டிசம்பர் வெளியீடு என்று மொட்டையாகவே அறிவித்துள்ளனர்.
தீபாவளி ரேஸில் இல்லை: பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே மற்றும் டூட் உள்ளிட்ட 2 படங்களும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும், துருவ் விக்ரமின் பைசன் மற்றும் ஹரிஷ் கல்யாணின் டீசல் உள்ளிட்ட படங்கள் தீபாவளிக்கு வெளியாகின்றன. கார்த்தியின் வா வாத்தியார் அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிப்பு நேற்று வெளியானதில் இருந்தே தீபாவளி ரிலீஸ் என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்த நிலையில், தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் ரிலீஸா?: இந்த டிசம்பருக்கு வா வாத்தியார் ரிலீஸ் என்று மட்டும் அறிவித்துள்ள நிலையில், அட்லீஸ்ட் கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தை டார்கெட் செய்து படம் வெளியானால் கூட வசூலை அள்ளும் என எதிர்பார்க்கின்றன்ர். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி படம் என்பதால் என்டர்டெயின்மென்ட்டுக்கு பஞ்சமே இருக்காது என எதிர்பார்க்கலாம்.
சர்தார் 2, கருப்பு எப்போ?: கிராண்ட் டிசம்பர் ரிலீஸ் என வா வாத்தியார் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ள நிலையில், கருப்பு திரைப்படம் பொங்கலுக்கு வருமா? சர்தார் 2 படம் பொங்கலுக்கு வருமா அல்லது 2 படங்களும் பிப்ரவரி, சம்மர் என தள்ளிப்போகுமா என்றும் ரசிகர்கள் அடுத்த அடுத்த படங்களின் ரிலீஸ் அப்டேட் குறித்த கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
மார்ஷல்: டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் மார்ஷல் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. கூடிய சீக்கிரமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி கைதி 2 படத்தில் நடிக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











