கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகுதா?.. கடைசி நேர ப்ரோமோஷன் கை கொடுக்குமா?

சென்னை: கடந்த வாரம் தமிழ் சினிமாவில் சுமார் 10 படங்கள் வெளியாகி பல படங்களுக்கு தியேட்டர்களே கிடைக்காத நிலையில், தோல்வியைத் தழுவி விட்டதாக படக்குழுவினரே கதறிக் கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் வெளியான படங்கள் பலவும் சிறு பட்ஜெட் படங்கள் தான். ஆனால், இந்த வாரம் முன்னணி நடிகர்கள் நடித்துள்ள 3 படங்கள் வெளியாகின்றன. அதில், குறிப்பாக கவின் நடித்துள்ள கிஸ் படமும் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ரசிகர்கள் பலருக்கும் இந்த வாரம் கவின் படம் வெளியாகிறது என்பதே தெரியவில்லை என்கிற பேச்சுக்கள் தான் அதிகம் எதிரொலித்து வருகின்றன. கவின் நடிப்பில் கடைசியாக வெளியான ப்ளடி பெக்கர் சரியாக போகாத நிலையில், அவரது அடுத்த படத்தை ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Kavin Kiss Movie pre release event happened today this week movie will release
Photo Credit:

இந்நிலையில், இன்று மாலை சென்னை சத்யம் தியேட்டரில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விடிந்தா கல்யாணம் புடி வெத்தலப்பாக்கை என்று சொல்வது போல படம் ரிலீஸுக்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், கவின் படத்தின் ப்ரோமோஷன் நடைபெறுவது அந்த படத்திற்கு எந்தளவுக்கு கை கொடுக்கும் என்கிற கேள்வியும் இண்டஸ்ட்ரியில் எழுந்துள்ளது.

சதீஷ் இயக்கத்தில் கவின்: ஜூன் போனால் ஜூலை காற்று பாடலில் வினய் உடன் இணைந்து நடனமாடி ரசிகர்களை கவர்ந்த நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் விஜய்யின் பீஸ்ட் படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்து கலக்கியிருப்பார். நடன இயக்குநராக தேசிய விருது வரை வென்றுள்ள சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள கிஸ் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் கவின், அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது.

பலத்த போட்டி: இந்த வாரம் பா. ரஞ்சித் தயாரிப்பில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் நடித்துள்ள தண்டகாரண்யம் திரைப்படம் வெளியாகிறது. மேலும், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள சக்தித் திருமகன் படமும் வெளியாகிறது. அந்த படத்தை அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார். இந்த 2 பெரிய படங்களுடன் போட்டியாக கவினின் கிஸ் படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.

கடைசி நேர ப்ரோமோஷன்: சக்தித் திருமகன், தண்டகாரண்யம் படங்களின் ப்ரோமோஷ ஏற்கனவே சூடு பிடித்துள்ள நிலையில், கவினின் கிஸ் படத்தின் ப்ரோமோஷன் இன்று முதல் ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படத்தின் டீசர், டிரைலர் எல்லாம் வெளியாகி இளைஞர்களை கவர்ந்த நிலையில், இந்த வாரம் திரைக்கு வரும் கிஸ் படம் யங் ஆடியன்ஸை ஈர்த்துவிட்டால் கண்டிப்பாக வெற்றி பெறும் என்கின்றனர்.

ரெண்டுமே ஆபத்து: சில படங்களுக்கு ஓவர் பில்டப் மற்றும் ப்ரோமோஷன் செய்வதன் காரணமாக படம் வெளியான பிறகு ரசிகர்கள் அப்செட்டாக படம் ஃபிளாப் ஆகிவிடும். சில படங்கள் ரிலீஸ் ஆவதே தெரியாத அளவுக்கு குறைவான ப்ரோமோஷனை செய்தாலும் படங்களுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும் என்கின்றனர். கவினின் கிஸ் திரைப்படத்தின் ரிசல்ட் என்ன ஆகும் என்பது இந்த வாரம் தெரிந்துவிடும். கிஸ் படத்தைத் தொடர்ந்து மாஸ்க் மற்றும் ஹாய் உள்ளிட்ட படங்களில் கவின் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X